Posts

Showing posts from February, 2015

சைலபதியும் இலக்கியச் சூழலும்

Image
சொற்களின் மீது எனது நிழல் –  சிறுகதைகள் சைலபதி பக். 160 விலை ரூ 120/- * நிவேதிதா பதிப்பகம் சென்னை வெளியீடு அலைபேசி 91 89393 87296 email -  nivethithappathipagam1999@gmail.com சைலபதியும்  இலக்கியச் சூழலும் * எஸ். சங்கரநாராயணன் சை லபதியின் இரண்டாவது சிறுகதைத் தொகுதி ‘சொற்களின் மீது எனது நிழல்‘ வெளியாகியிருக்கிறது. நேற்று (27,02,2015) இலக்கிய வீதி, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இணைந்து அவருக்கு ‘அன்னம்‘ விருது அளித்து கௌரவித்தது. அதே நாளில் இந்தத் தொகுதியும் வெளியிடப்பட்டது. இலக்கிய வீதி இனியவன் வெளியிட்டார். முதல் பிரதி நான் பெற்றுக் கொண்டேன்.   எந்தக் காலத்திலும் இல்லாத அளவில், தமிழ்ச்சூழல் கவலை தருகிறதாய் இருக்கிறது. இந்தக் காலத்தில் எழுத வந்ததே கூட சிரமமான விஷயமாய் இருக்கிறது. மூத்த தலைமுறையினர் எல்லாருக்குமே, எங்க காலம் ஆகா, உங்க காலம் சுகமில்லை… என்கிற புலம்பல் இருக்கும். நான் சொல்வது அந்த மாதிரி அல்ல. இலக்கியத்தில்   பொதுவாக அரசியல் தலையீடு குறைவாகவே, அலட்சிக்கத் தக்கதாகவே இருக்கும். அதன் உச்சகட்ட தலையீடு, அதிகாரப் பிடிப்பு இப்போது உள்ளது.

very short story / America

Image
very short story துரதிர்ஷ்டம் ஆலன் இ , மேயர் உ டம்பெங்கும் கடும் வலியுடன் கண் விழித்தேன். என் படுக்கையருகே ஒரு நர்ஸ்.      '' ஃபியுஜிமா ஐயா... '' என்றாள். '' ரெண்டுநாள் முன்னால் ஹிரோஷிமாவில் அணுகுண்டு போட்டதில் , உங்கள் நல்லதிர்ஷ்டம் , நீங்கள் தப்பித்து விட்டீர்கள். இப்போது நீங்கள் இந்த ஆஸ்பத்திரியில் நலமாய் இருக்கிறீர்கள். ''      பலவீனமாய் நான் கேட்டேன். '' இது எந்த இடம் ?''      '' நாகசாகி '' என்றாள் அவள். --- தமிழில் எஸ். ச ங்கரநாராயணன்
Image
சொற்களின் மீது எனது நிழல் சைலபதியின் சிறுகதைத் தொகுதி * அணிந்துரை / தமிழ்மகன் * சொற்களின் மீது உனது நிழல் * ''ஹலோ... சைலபதி?'' ''ஆமாம் சார். ஒரு நிமிஷம்... வண்டியை ஓரமா நிறுத்திட்டுப் பேசறேன். ம்.. சொல்லுங்க சார். படிச்சுட்டீங்களா?'' ''படிச்சுட்டேன். நல்ல தொகுப்பு. புதிய  புதிய களம்... நல்லா வந்திருக்கு.'' ''நன்றி சார்.'' ''உங்களுக்குப் பெண் குழந்தை இருக்கா?'' ''இல்லை சார்.'' ''உங்கள் கதைகளில் பெண் குழந்தைகள் முக்கியமான பாத்திரங்களாக இடம் பெற்றிருப்பதைப் பார்த்தேன். அதான் கேட்டேன்.. அப்புறம் இன்னொரு சந்தேகம்...'' ''சொல்லுங்க சார்'' ''ஸ்ரீ தோஷம்னு ஒரு கதை... ஸ்திரி தோஷம் என்பதுதான் தப்பா வந்துடுச்சோன்னு'' ''இல்ல சார். ஸ்ரீ தோஷம் சரிதான்.'' ''இப்பத்தான் முன்னுரை எழுதிக்கிட்டு இருக்கேன். கேட்கணும்னு தோணுச்சு... சரி.. ஓ.கே.'' '

தமிழ்மகனின் சிறுகதை - த க வ ல்

Image
SHORT STORY த க வ ல் * தமிழ்மகன் வா னத்தில் இருந்து தேவதூதன் யாரும் காட்சி தரவில்லை. வழக்கமான விடியல்தான். எப்போதும்போல ஐந்து நிமிட தாமதம் அதைச் சரிகட்ட ஓட்டம். ஓடும்போது டிபன் பாக்ஸ் திறந்து கொண்டு சாப்பாடு கூடையில் கொட்டிக் கொண்டது. இதுவும்கூட வழக்கமான ஒன்றுதான். இது எல்லாமே முருகனுக்கான வழக்கம் பற்றியது. அவன் அலுவலகத்தில் கெடுபிடி அதிகம். ஒரு ஜெர்மன் நிறுவனத்துடன் முருகன் வேலை பார்க்கும் அலுவலகம் ஒப்பந்தத்தில் இருந்தது. அதற்காக அதனுடைய வேலை நேரம் முதற் கொண்டு எல்லாமே சராசரி இந்த அலுவல் நேரங்களுக்கு மாறுபட்டிருந்தது. காலை ஏழு இருபத்தெட்டுக்கு அவனுக்கான அலுவல் நேரம் தொடங்கும். நான்கு முப்பத்திரண்டுக்கு வெளியே அனுப்புவார்கள். ஒவ்வொரு விநாடியும் முக்கியம் என்று பணியாளர்களுக்குச் சுட்டிக் காட்டத்தான் இந்த ஏற்பாடு. "உச்சி வெயில்ல எங்கடா கிளம்பிட்டே?', "விளக்கு வெச்ச பிறகு சாப்பிட மாட்டேன்'.. என நேரத்தைக் குத்து மதிப்பாகச் சொல்கிற குடும்பச் சுழலில் அவன் இந்த ஏழு இருபத்தெட்டு விஷயத்தை காலைல ஏழரை மணிக்கு ஆபீஸ் என்றுதான் சொல்ல முடிந்தது. அவர்களும் அதை எ

15 02 2015 -ICSA Centre Egmore Chennai 008 நன்றி ஓ ஹென்றி – சிறுகதைத் தொகுதி வெளியீடு ஏற்புரை

Image
15 02 2015 -ICSA Centre Egmore Chennai 008 நன்றி ஓ ஹென்றி – சிறுகதைத் தொகுதி வெளியீடு ஏற்புரை பேச என ஏற்கனவே சுருக்கமாகத் தான் வைத்திருந்தேன். பொக்கிஷம் புத்தக அங்காடி பதிப்பகத் துவக்க விழா, மற்றும் எனது மற்றம் எம்.ஜி. சுரேஷின்  நூல்கள் வெளியீடு… நேரம் நழுவிக்கொண்டே வந்தது. எனது ஏற்புரைக்கு மணி எட்டே முக்கால். கேட்பவர்களின் மனநிலை பற்றித் தெரியவில்லை. எனக்குத் தகுதியுரை அளித்த லா.ச.ரா. சப்தரிஷி லா.ச.ராவையும், சுநுஜாதாவையும் திரும்பத் திரும்ப வியந்தும் நயந்தும் என்னைப் பற்றி அதன்கூடவும் பேசியதாகப் பட்டது. ரொம்ப சிறிய அளவில் தான் நான் ஏற்புரை வழங்க வேண்டும், என்று பட்டுவிட்டது. நன்றி ஓ ஹென்றி. நன்றி பேச்சாளர்கள். நன்றி பதிப்பாளர். நன்றி லா ச ரா, நன்றி சுஜாதா… என்று அமர்ந்து விட்டேன். என்றாலும் பேச வைத்திருந்த சிறு உரை அதைக் கீழே தரலாம்… நமது இணைய வாசகர்களுக்கு என… என்று பகிர்கிறேன்… தோள் கண்டார் தோளே கண்டார் ·         எஸ். சங்கரநாராயணன் பொ க்கிஷம் புத்தக அங்காடியின் எனது பதிப்பாளர் மாக்சிமுக்கு நல் வாழ்த்துக்கள். முதல் இரண்டு நூல்களையுமே முத்திரை நூல
Image
short story கல்கொக்கு எஸ்.சங்கரநாராயணன் * எ ப்படியும் வீடு திரும்ப இரவு நேரமாகி விடுகிறது. சுடுகாடு. ஊராட்சி எல்லை போர்டு. டிரான்ஸ்ஃபார்மர். கடந்து புத்துக்கோயில் வாசலில் இறங்கவே கால் கூசி பயந்து கிடக்கும். பஸ்சும் போய்விட்டால் ஜிலோவென்றிருக்கும். விட்டு விட்டு வாகனங்கள் பால்லாரி போல வெளிச்சம் சிந்திப் போகும். தவளை குதிக்க, நீர் பிரிந்து நீர் சேர்ந்தாப் போல, திரும்ப இருட்டு சூழும்.      அவன் மனைவியின் கனவு அது. வீடு வாங்குவது. சொந்த வீடு என்பது மன வலிகளுக்கு ஒத்தடம் தான்.      குளிரான காற்று. விளக்கவியலாத அதன் வாசனை. தனிமை. மகா தனிமை அது. ரெண்டு பக்கமும் வயல்கள். ஒரு காலத்தில் வயற் பசுமைக்கு நடுவே வெள்ளைக் கொக்குகள் தட்டுப்படும். இப்போது விவசாயமே பட்டுப்போய் மனைகளாகி வெண் கற்கள் நின்றன. கல்கொக்குகள் போல.      ஒரு ஐம்பதடி நடை. வலப்பக்கமாக இறங்கும் சிறு சந்து. விஸ்வரூபம் எடுத்தாப் போல முள் கிளம்பி கன்னத்தைக் கீச்சுவதாக ஆடியது. இரவுப்போதில் சடைசடையான அதன் காய்கள் பாம்பென அச்சுறுத்தின. புதர்களில் இருட்டு தீவிரப்பட்டு அடர்ந்திருந்தது