Posts

Showing posts from January, 2018
Image
மூங்கில் எஸ். சங்கரநாராயணன் அ வள் வைதேகி. அக்கா. இவள் சக்தி. தங்கை. அக்காவும் தங்கையும் ஒரே பள்ளிக்கூடத்தில் படித்து இப்போது அக்கா கல்லூரி போகிறாள். தினசரி ஒண்ணாய் ஒரே வேனில் பள்ளிவரை அக்காவோடு உற்சாகமாய்ப் போவாள் சக்தி. இப்போது தனியே போவது அவளுக்குக் கஷ்டமாய் இருந்தது. ஆனால் அக்காவைப் பார்க்க மகிழ்ச்சி. கல்லூரியில் திங்களுக்குத் திங்கள் புடவை கட்ட வேண்டும் என்று கட்டாயம். வைதேகியைப் புடவையில் பார்க்க சக்திக்குச் சிரிப்பு. எந்நேரமும் புடவை சரியலாம் என்கிற சிறு பதட்டத்துடன் தெருவில் நடந்து வருகிற அக்காவைக் கிண்டல் அடித்தாள். “இருடி உனக்கும் இருக்கு…” என்றாள் அக்கா அழாக் குறையாக. “புடவை கட்டற காலேஜ்னா நான் வேணான்னுருவேன்ல” என்று அதற்கும் சிரித்தாள் சக்தி. என்றாலும் அக்காமேல் கொள்ளைப் பிரியம் அவளுக்கு. அக்கா போல தான் அழகும் அல்ல. நிறமும் அல்ல. நிறத்தில் நான் அப்பா, என்றால் அவள் அம்மா மாதிரி. எந்த உடையும் அவளுக்கு, வைதேகிக்கு மேச்சாய் அமைந்து விடுகிறது. சற்றே பெண்மையின் ஆளுமை மிக்க அக்கா. வெளியே கிளம்பினால் ஒரு விநாடி நின்று கண்ணாடி பார்த்துவிட்டுக் கிளம்பும் அக்கா. கண்ணுக்கு