Posts

Showing posts from June, 2021
Image
  உறைவு எஸ்.சங்கரநாராயணன் (published in kanayazhi monthly) யா ரோ நடமாடுவதுபோல் இருந்தது. சட்டெனத் திரும்பிப் £ ர்த்தாள் மாதங்கி. ஒருவேளை பிரமையோ? அப்படி ஓர் உணர்வு அடிக்கடி ¢ அவளுக்கு வந்துகொண்டே யிருந்தது. யாரோ பார்க்கிறார்கள். யாரோ நம்மை உற்றுக் கண்காணிக்கிறார்கள். யாரோ கூட நடமாடுகிறார்கள். ஏன் இப்படி தெரியவில்லை. நினைவுதெரிந்த நாளில் இருந்தே இந்த பிரமை அவளுக்கு இருந்துவந்தது.       பெண்கள் அப்படியொரு சூட்சும மோப்பத்துடனேயே வளர்க்கப் படுகிறார்கள். அம்மாவுக்கு எப்பவுமே தன்னையிட்டு அல்ல, இவளையிட்டு பயம் அதிகம். தன்சார்ந்த பயங்கள் இயல்பாகவே அவளுள் விதைக்கப்பட்டவை. ஆண் குழந்தை பெற்றால் அது, அந்த பய உணர்ச்சி, கொஞ்சம் மேடு தட்டியும், பெண் குழந்தை என்றால் மேலும் பள்ளம் பாரித்தும் போகிறது. அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு. பெண்ணின் முதல் இலக்கணம் பயம். ஆண் அச்சம் மடம் ரெண்டையுமே சேர்த்து எள்ளுகிறான். அச்சம் என்பது மடமையடா.       யாரோ பார்க்கிறார்கள், என்பதற்கும் யாரோ பார்க்கக் கூடும் என்று உள்ளே ஒலிக்கிற எச்சரிக்கைக்கும் பேதமில்லையோ என்னவோ?       குறிப்பாக அவள் தனியாக இருக்கும் கணங்க
Image
  தி. ஜானகிராமனின் ‘கமலம்’ கனலைக் கிளர்த்தல் எஸ். சங்கரநாராயணன்  * ஜா னகிராமனின் மண்வாசனைக்கு எப்போதுமே மகத்துவம் உண்டு. நாம் தாண்டிவந்த இளவயதை மண்வாசனை நினைவுபடுத்தி விடுகிறது. இன்பமும் துக்கமுமான நினைவுகள் அவை, என்றாலும் அவை கடந்துபோன துக்கம் என்ற அளவில் அதில் சிறு புன்னகையே இப்போது நம்மிடம் விளைவிக்கிறது. இளமைக்காலம் இப்போது நாம் ‘இழந்த’ ஒரு காலமாக ஏக்கத்துடன் நினைவுகூர வைக்கிறது. அதை அசைபோடுதல் ஆனந்தமயமானது. எந்தவோர் இளைஞன் வாசித்தாலுமேகூட அந்த எழுத்தில் ஊடாடிநிற்கும் உயிர் அவனை படரும் கொடியாய்த் தீண்டிவிட வல்லது. குந்தித் தின்றால் குன்றும் மாளும்... என்பார்கள். அவசரப்படாத நிதானமான அசைபோடலுடன் தி.ஜானகிராமன் தன் பாத்திரங்களுடன் இயங்குகிறார். மனிதர்கள் அவர்களது சூழல், இயல்பு, அவைசார்ந்து அவர்களின் மனவோட்டங்கள், காரியங்கள்... அப்படி அவர் வாழ்க்கையின் இயக்கத்துக்கு மிகுந்த நியாயம் செய்கிறார். அதனால்தான் எத்தனை முறை வாசித்தாலும் திகட்டுவதே இல்லை அவர். சந்நிதானத்துத் திருவுருவைத் திரை விலக்கிக் காட்டுகிறார் தி.ஜானகிராமன். தி.ஜானகிராமனின் ‘கமலம்’ குறுநாவலை மீண்டும் வாசிக்கும
Image
  சிம்மாசனம் அ.முத்துலிங்கம்   தி னமும் 5 நிமிடம் பிந்திவரும் சோமபாலாவுக்கு வயது முப்பதுக்குள்தான் இருக்கும். ஆறடி உயரமாக இருப்பான். அடிமரக்குத்திகளை  தோளிலே அனாயாசமாக தூக்கி எறிவதை கண்டிருக்கிறேன். அப்படிச் செய்யும்போது அவன் புஜத்தில் திரளும் தசைநார்கள் முறுகி உருண்டு பெருகி புஜத்தை உடைத்து வெளியே வந்துவிடுமோ என்ற அச்சத்தையூட்டும். கைகட்டி முன்னே நின்றான். ஆசனத்தில் உட்காரமாட்டான். அவன் கையில் பிடித்திருந்த அட்டையை நீட்டினான். ஐந்து நிமிடம் பிந்தி வந்ததால் வருகை நேரம் அட்டையில் சிவப்பாக அச்சடிக்கப்பட்டிருந்தது.   ஆயிரம் பேர் வேலைசெய்யும் அந்த தொழிற்சாலையில் 6 மாதம் முன்னர்தான் வருகை பதிவு மணிக்கூடுகள் இரண்டை நிறுவியிருந்தார்கள். தொழிலாளிகள்  நிரையாக வந்து தங்கள் தங்கள் அட்டைகளை மணிக்கூட்டில் செருகி  வருகை நேரத்தை பதிவுசெய்வார்கள். 5 நிமிடம் பிந்தி வந்தால் 15 நிமிடக் கூலி வெட்டப்படும். 15 நிமிடம் பிந்தி வந்தால் அரைமணி நேரக் கூலி. அரை மணி பிந்தி வந்தால் ஒரு மணிநேரக்கூலி. ஒரு மணி நேரம் பிந்தி வந்தால் தொழிலாளி அன்று உள்ளே அனுமதிக்கப்படமாட்டார். .   சோமபாலா தினமும் பிந்தி வந்
Image
  அபிராமியின் கடைக்கண்கள் எஸ்.சங்கரநாராயணன்  (நன்றி / பேசும் புதிய சக்தி, ஜுன் 2021)  அ மைதியான இரவுகளில் சில சமயம் தெருநாய்கள், அமைதி உள்குடையப் பட்டு ஆத்திரத்துடன் குரைப்பு எடுப்பதைப் போல, அப்பாவுக்கு அடிக்கடி இராத்திரி இருமல் வரஆரம்பித்து விடுகிறது. சிறு மழை, தூறல் கூட அவருக்கு உடம்பைப் படுத்தி விடுகிறது. இரவிருளின் நிழல் சித்திரம் எதிலும் அவர் கலவரப் பட்டாரா? பகலிலேயே அவர் அத்தனை தைரியசாலி என்று சொல்ல முடியாது. மிகக் குறைவாகவே, தலையாட்டலுடன் யோசித்து ஓரிரு வார்த்தை பேசுவார். உண்மையில் அந்த உடல் படுத்தலுக்கு அவரது வாழ்க்கைசார்ந்த நம்பிக்கை யின்மையே, பயமே காரணம் என்று சேதுவுக்குத் தோன்றியது. சேது இப்போது ஒன்பதாம் வகுப்பு படிக்கிறான். ஊரில் ஒரே பள்ளிக்கூடம்தான். நடந்தே போய் நடந்தே திரும்பி வருகிற அளவில், ஆனால் தூரம் அதிகம். மீசை அரும்பும் அந்த வயது அப்படி. திடீரென்று மூளை சொந்தமாக யோசித்து, முடிவுகள் எடுக்க பரபரப்பாகிறது. எல்லாவற்றையும் சந்தேகமாகவும் தலைகீழாய்ப் புரட்டியும், சுய சிந்தனையுடன் சீர் தூக்கியும் பார்க்க ஆரம்பிக்கிறது. மீசைக்கும் அதற்கும் தொடர்பு இருக்கலாம். அதேவயது