Posts

Showing posts from July, 2022
Image
  நன்றி தமிழ்ப் பல்லவி ஜுலை 2022 தம்புரா எஸ்.சங்கரநாராயணன்   ஒ ரு ராட்சச கரண்டி டிசைனில் இருந்தது அது. தம்புரா. எனக்கு சங்கீதம் அவ்வளவு தெரியாது. அவ்வளவு என்ன, தெரியாது என்றே சொல்லலாம். இது குறித்து என் அம்மாவுக்கு வருத்தம் இருந்தது. “நல்லா ஆச்சி, ஒரு பொண்குழந்தையாப் பிறந்துவிட்டு…” என அவள் அலுத்துக் கொள்ளலாம். சங்கீதம் தெரியாதது மாத்திரம் அல்ல. அம்மாவுக்கு என்னையிட்டு மேலும் நிறைய வருத்தங்கள் இருந்தன. அதில் பிரதான வருத்தம் நான் அவளை சட்டை செய்யவில்லை என்பதாக இருக்கலாம். இதுகுறித்து ஒன்றும் செய்வதற்கு இல்லை. நான் சட்டை செய்வது அவளுடைய ஆர்வக் கனலைக் கிளர்த்தி எரியவிட்டு அம்மா எனக்கு சங்கீத ஞானத்தைப் புகட்ட உக்கிரமான பரபரப்பு காட்ட நேரிடலாம். பொதுவாக ஒரு திறமை தனக்கு இருக்கிறது என உணர்ந்தவர்கள் அதைப் பிறருக்குப் பகிரவும் போதிக்கவும் தினவு அடைகிறார்கள். அது தங்கள் கடமை என அவர்கள் நினைக்கிறார்கள். யாம் பெற்ற இன்பம் பெறுக வையகம், என்பது கோட்பாடு. வையகம் அதை வேண்டாம் என மறுக்கக் கூடாது. ஆயினும் அது நீ பெற்ற இன்பம், யாம் பெற்ற துன்பம் என ஆகிவிடுவதும் உண்டு. அது அம்மாவின் தம்புரா.
Image
  நன்றி ‘பேசும் புதிய சக்தி’ ஜுலை இதழ் ஒ லி யி ன்   நி ழ ல் எஸ்.சங்கரநாராயணன்   பா தி ராத்திரியில் தற்செயலாக அப்பா விழித்துக் கொண்டார். நடை ஒட்டிய ரேழியில் அவனும் அப்பாவும் படுத்துக் கொள்வார்கள். பெளர்ணமி தினமா, அல்லது இரண்டொரு நாளில் பௌர்மணி வருகிறதா தெரியவில்லை. வெளியே பளீரென்று விபூதி கொட்டிக் கிடந்தது வெளிச்சம். பால் பாக்கெட் ஒழுகினாற் போல. அப்பா கண்திறந்து பார்த்தபோது அவன், திருவாசகம் எழுந்து உட்கார்ந்திருந்தான். “என்னடா?” “என்னால தூங்க முடியல” என்றான் திருவாசகம். “என்ன பண்ணுது ?” என அவரும் எழுந்து உட்கார்ந்தார். “நேத்து சாப்பிட்டது எதாவது ஒத்துக்கலையா?” “அப்பிடியும் தெரிலயலப்பா… உள்ள எதோ மனசு குழப்பம் காட்டுது.” “அப்பிடீன்னா?” “எனக்கே அதைச் சொல்லத் தெரியல…” “என்ன வெளிச்சம் பார்… சில சமயம் இந்த வெளிச்சமே ஒரு மாதிரி உள்ளே கொந்தளிக்கும்…” என்றார். “எங்கியோ பொங்கின பால் நம்ம வீட்டுக்குள்ள வழிஞ்சி பிசுபிசுன்னு உள்ள வந்தாமாதிரி…” ஆனால் அது இத்தனை திகைக்கடிக்க வேண்டியது இல்லை. பௌர்ணமி இரவுகள் அழகானவை. ஒளிக்குளியல் நிகழ்த்தலாம். சில சமயம் இப்படிப் பொழுதுகளில் மொட்
Image
  நிசப்த ரீங்காரம் • சிந்தனைத் தொடர் / பகுதி 9 உருமல் ஞானவள்ளல்   வி னைகள் எதிர்வினைகளைத் தூண்டுகின்றன. வினை இன்றி எதிர்வினை இல்லை. எதிர்வினைகளுக்காகவே வினைகள் நிகழ்வதும், நிகழ்த்தப் படுவதும் இயல்பானதுதான். நாணயம் என்றால் இரு பக்கங்கள். நல்வினை இருந்தால் தீவினை. கடவுள் இருந்தால் சாத்தானும் இருக்கவே செய்யும். புண்ணியம் உள்ள வரை பாவமும் ஜீவிக்கும். ஒளி இருந்தால் நிழல் இருக்கிறது… அதைப் போல.   இருள்சேர் இருவினை, என்று வள்ளுவர் குறிப்பிடுவதை கவனிக்கலாம். இருவினை என்றால், நல்வினை தீவினை,.. இரண்டும். தீவினை மாத்திரம் அல்ல, நல்வினையும் இருள் சேர்க்கும் என்கிறார் வள்ளுவ ஆசான். பாவத்தின் பலன்கள் தொடர்வது போலவே, புண்ணியம் செய்தால் சுப பலன்கள் தொடர்கின்றன. இது ஒரு தொடர் நிகழ்வாகி விடுகிறது. தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப்படும். முதலில் உன்னைக் கெடுத்து பின் பிறரைக் கெடுக்கிறது தீயவை. இதை நம்ம எழுத்தாளர் ஒருவர் அறியாதவரா? நெருப்பு என்று சொன்னால் நா சுட வேண்டும். எழுதினால் காகிதம் பொசுங்க வேண்டும்… என்கிறார். நெருப்பு… என்று சொல்லிவிட்டு ‘பெப்பே’ எனத் திரிய எனக்குச் சம்மதம்