ஓம் சக்தி தீபாவளி மலர் 2023ல் வெளிவந்த கதை.

எமர்ஜென்சி கோட்டாவும்

வெயிட்டிங் லிஸ்டும்

எஸ்.சங்கரநாராயணன்

 

சில பெயர்களை வைத்து அந்த நபர் ஆணா பெண்ணா என்று யூகிக்க முடிவது இல்லை. எங்கள் அலுவலகத்தில் கஸ்தூரி என்று ஒருத்தர் வேலை செய்தார், அவரது முழுப்பெயர், கஸ்தூரிராஜன்… என்று நினைக்கிறேன். அதுவே ஞாபகத்தில் இல்லை. எல்லாரும் அவரை கஸ்தூரி சார் என்றே அழைத்துப் பழக்கம்.

கஸ்தூரி தினசரி அலுவலகத்துக்குக் குடை எடுத்து வருவார். சிறு வெயிலும் அவரை ஆயாசப் படுத்தியது. தளர்ந்த நடை. “இன்னும் ஒரு வருடம். நான் ரிடையர் ஆயிருவேன். அதுவரைக்கும் தாக்கு பிடிக்கணுமே” என்று பேரலுப்புடன் பேசுவார். பார்க்கப் பாவமாய் இருக்கும். சில பேர் துன்பப்பட என்றே பிறக்கிறார்கள் என்று அவரைப் பார்த்தால் தோன்றும்.

நிறைய ஆசையும் எதிர்பார்ப்புமாய் அவர் தன் மனைவியைக் கல்யாணம் செய்து கொண்டார். அவர் மனைவி அத்தனை அழகு என்று சொல்ல முடியாது… என்றாலும் அவர் அவளை அத்தனை நேசித்தார். கல்யாணத்துக்குப் பிறகு தன் வாழ்க்கை அபாரமாய் இருக்கும் என அவருக்கு அத்தனை நம்பிக்கை இருந்தது. கனவு இருந்தது.

கஸ்தூரியின் மனைவிக்கு கணவன்மேல் காரணம் புரியாத எரிச்சல். இவரைவிட மேலான எதிர்பார்ப்புகள் அவளுக்கு இருந்திருக்கலாம். கல்யாணம் ஆனவுடன் அநேகப் பெண்கள் தங்கள் எதிர்பார்ப்புகளை அதிகப் படுத்திக் கொள்கிறார்களா தெரியவில்லை. கல்யாணத்துக்குப் பிறகு அவர்கள் கண்ணில் படும் எல்லா ஆண்களுமே, தன் கணவனைத் தவிர மற்ற எல்லாருமே புத்திசாலிகளாக அறிவாளிகளாகத் தோற்றம் தருவதைப் பற்றி என்ன செய்ய? அதுவும் இந்தக் கணவர்கள் அதற்கு என்ன செய்ய முடியும்?. கணவனிடம் அவளுக்கு ஆத்திரம் இருந்தது. ஏமாற்றப்பட்ட ஆத்திரம். அவர் என்ன அவளை ஏமாற்றி விட்டார்? அது கஸ்தூரிக்குப் புரியவேயில்லை… கடைசிவரை.

ஆமாம். கஸ்தூரி சார் இறந்து விட்டார். அலுவலகத்தில் இருந்து ஒரு டாக்சி பிடித்து எல்லாருமாக ஒண்டிக்கொண்டு – சாரதா பக்கத்தில் யார் ஒண்டிக் கொள்வது என்று எல்லாருமே பிரியப்பட்டார்கள்.

ஒல்லியான கஸ்தூரி. குடைக் கம்பியாய் உடம்பு. கன்னத்தில் எலும்பு சிறிது துருத்தி சதைப் பற்று இல்லாமல் வெளியே தெரிந்தது. கலைந்த தலையில் முடிப் பிசிர். அந்த ஒல்லி உடம்புக்கு தீக்குச்சி போல் அது தெரிந்தது. அவர் சிரிப்பதே இல்லை. சிரித்தாலும் அதில் ஒரு விகாரம் தெரிந்தது. காரணமே இல்லாமல் அடிக்கடி தலையைச் சொறிந்தார். தவிரவும் கல்யாணம் ஆகிற சமயத்திலேயே அவருக்கு மூக்குப்பொடி போடும் பழக்கமும் இருந்தது. சாதாரணமாகவே அதன், நாசியின் உள் ஓரங்களில் ஓர் இருட்டுக் கரை இருக்கும். சளி பிடித்து அதற்கு ஒரு வைத்தியம் போல பொடி போட அவர் ஆரம்பித்து இந்த குகை இருட்டும் வந்தமைந்து விட்டது. தவிரவும் சளியை வெளியேற்ற எப்பவுமே அவர் கைக்குட்டை பயன்படுத்தி வந்தார். மூக்கு துவாரத்துக்குள் வெடி மருந்து அடைப்பதைப் போல அவர் உள்ளே பொடியைச் செலுத்தி சிறு விநாடியில் படீர் என்று அதை அவர் வெடிக்கவும் செய்தார். அதைத் தொடர்ந்து அந்த துவாரத்தின் வழியே கருத்த பாம்பு போல வெளிவரும் திரவத்தை கைக்குட்டையில் வாங்கி பைக்குள் பத்திரப் படுத்தினார்.

சில பெண்களுக்கு சில ஆண்களை முதல் பார்வையிலேயே பிடிக்காமல் போய்விடுகிறது. கஸ்தூரியின் ஒல்லி தேகமும் ஒழுங்கற்ற பல் வரிசையும் அவளைத் திகைக்க அடித்தன. பல்லுக்கும் மேலே ஈறுஜவ்வு வளர்ந்து கிடந்தது  கிட்டே நெருங்காமலேயே அதில் இருந்து வரும் கெட்ட வாடையை ஊகிக்க முடிந்தது. சற்றே தலைதூக்கி அவள் அவரை, அவர் அவளைப் பார்த்தபோது, ஐயோ இந்தாள் சிரித்துத் தொலைத்து விடுவாரோ, என்று பயமாய் இருந்தது.  

பெண்பார்க்க வந்த கஸ்தூரி அவளைப் பார்த்துச் சிரித்தார்.

அவளிடம் யாரும் மாப்பிள்ளையைப் பிடித்திருக்கிறதா என்று கேட்கவேயில்லை. மாப்பிள்ளை மத்திய அரசாங்க வேலையாக்கும்… என்று காணாததைக் கண்டாற்போல எல்லாரும் நினைத்தார்கள். எத்தனையோ சிவப்பான அழகழகான மாப்பிள்ளைகள் இருந்தார்கள் லோகத்தில். ஆனால்… அவர்களுக்கு அரசாங்க வேலை என்று இருக்க வேண்டாமா?

அவனுக்கும் அவளுக்கும் பொருத்தமே இல்லவே இல்லை. பணம் இல்லாமல் அவள் கல்யாணம் தள்ளிப் போய்க்கொண்டே யிருந்தது.  ஆகா இத்தனை நாள் காத்திருந்ததுக்கும் அதுக்கும் அடிச்சாடி அவ லக்கி பிரைஸ்… என்று ஒருத்தி அவளைப் பார்த்துச் சொன்னாள். அறையலாம் போலிருந்தது. அரசாங்க வேலையாக்கும். புருசன் செத்தாலும் பென்சன் தருவாங்க இல்லே, என அவளுக்குப் பொறாமை. சனியனே, இன்னும் கல்யாணமே ஆகல்ல. அதற்குள் புருசன் சாவு, பென்சன்னுகிட்டு… அதுவும்… ஏம்மா புருசன் நல்லபடியா ரிடையரானா பென்சன் வராதாமா?

அவனுக்கும் அவளுக்கும் ஒட்டவேயில்லை.  ஒரேயொரு ஒற்றுமை. அதுவும் தற்செயலாய் அமைந்தது. அவனுக்கு கஸ்தூரி என்று பொம்பளையாள் பெயர் அமைந்தது போலவே. ஹ்ம்… அவளுக்கு அமைந்ததும் ஆம்பளைப் பெயர். அலள் பெயர் கணபதி. அந்தப் பென்சன் பத்தி பெருமைப் பட்டவள்… அவள் யோசித்திருந்தால் இதையும் பாராட்டி யிருப்பாள்.

கஸ்தூரி இந்த அறையில் இருந்தால் அவள், கணபதி பக்கத்து அறைக்குப் போய்விடுவாள். அவள் முகத்தைப் பார்த்து அவர் எதோ சொல்ல வந்தால் அவள் அவரைப் பார்ப்பதே இல்லை. “இன்னிக்கு’ என்ன சமையல் பண்ணலாம்?” என்பது போல இயல்பாய் அவள் அவரிடம் வந்து உட்கார்ந்து பேச மாட்டாளா என்று அவர் எதிர்பார்த்து ஏமாந்தார். அவர்மீது அவளுக்கு என்ன கோபம் என்று அவருக்குப் புரியவே இல்லை.

எனக்கென்ன குறை? கொஞ்சம் ஒல்லியான ஒடிசலான தேகம். நிழலே கீழே விழாத உடம்பு. கை நிறையச் சம்பளம். எல்லாம் புதுத் தாள். பக்கத்து எதிர் வீடுகளில் அதுவே ஒரு மதிப்பை கௌரவத்தைத் தந்தது. பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து புது ரூபாய்த் தாள்கள் வாங்கி வந்து சம்பளம் என்று தருவார்கள். ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டி கையெழுத்து போட்டு வாங்கிக்கொள்ள வேண்டும். கல்யாண வீடுகளில் மொய் வைக்க புதுத்தாள் ஒரு கௌரவம். சில பேர் சம்பள சமயம் வந்து அவரிடம் புதுத்தாள் கேட்டு கைத்துட்டுக்கு மாற்றாக வாங்கிப் போவார்கள். கஸ்தூரி புதுத்தாள் தந்தபடியே ஒரு சிரிப்புடன் கணபதியைப் பாத்தார். வெடுக்கென்று கழுத்தை ஒடித்துக்கொண்டு திரும்பிக் கொண்டவளைத் திகைப்புடன் பார்த்தார்.

பென்ஷன் எவ்வளவு  வரும்?... என்று ஏனோ தோன்றியது.

கணபதியைத் தவிர, அவள் மளிகை சாமான் வாங்குகிற தெருவோரக் கடைக்காரர் வரை அவரது புது ருவ்வாத் தாளுக்கும் வெள்ளை முழுக்கைச் சட்டைக்’கும் மரியாதையும் மதிப்பும் இருந்தது. ஆனால் அவளுக்கோ அவனை நினைத்தாலே பல் மூடிய ஈறுகளும் அதன் சகிக்க முடியாத கற்பனை வாடையுயும்தான் முதல் ஞாபகமாக வந்தது. அப்பறம் எங்க குழந்தை பிறக்க? அவன் கிட்டே வந்தாலே அந்தக் கெட்ட வாடைக்கு அவளுக்கு வாந்தி வந்தது.

அவள் வாந்தி எடுக்க வேண்டிதான் அவன் கிட்டே வந்தான் என்பது வேறு விஷயம்.

கஸ்தூரி சார் எதிர்பார்த்தபடி அவர் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையவில்லை என்பது ஏமாற்றமாக இருந்தது. பொதுவாகவே அவர் அதிர்ஷ்டம் இல்லாதவர்தான். கன்னங் கருத்த சிறிய உடம்பு. முதல் பார்வைக்கே கவர்ந்திழுக்கிற மாதிரி எந்த சுவாரஸ்யமும் அவரிடம் இல்லை. யாரும் அவரிடம் கிட்டே வந்து பேசுவதும் இல்லை. அவர் பக்கத்தில் போனாலே அவரைச் சுற்றி ஓர் அகழி போல கெட்ட வாடை ஒன்று வந்தது. 1431 பயோரியா பல்பொடி ஒருநாளைக்கு எத்தனை தடவைதான் தேய்ப்பது.

வாழ்க்கையில் ஏமாற்றங்கள் இருக்கலாம். ஏமாற்றமே வாழ்க்கை என அவருக்கு ஆகிப்போனது. அந்தத் தாளொணாத தனிமை அவரையே மிரட்டிக் கொண்டிருந்தது.

எப்படியோ அவருக்கு வேலை கிடைத்தது. அரசாங்க வேலை. பென்சனுடன் கூடிய அரசாங்க வேலை. அதற்கு மதிப்பெண் பார்த்து கொடுத்து விட்டார்கள். நேர்முகத் தேர்வு இருந்தால் என்ன ஆகியிருக்கும் தெரியாது.

கஸ்தூரிக்கு அவரையே பிடிக்கத்தான் இல்லை. கல்யாணமே ஆகுமா என்று திகைப்பு காட்டிய வாழ்க்கை. ஒரு வழியாக கல்யாணம் ஆகியது. அரசாங்க வேலை. பென்சன்.. என்று எப்படியெல்லாம் சிந்திக்கிறார்கள். ரொம்ப சுமாரான மாப்பிள்ளை பக்கத்து வீட்டுக்காரிக்கு அமைந்ததில் ஒருவேளை அவள் சந்தோஷப் பட்டாளோ என்ன்வோ?

தனக்கு இருக்கும் ஏதோ சில நல்ல விஷயங்களை நினைத்து நாமாக நம்மை மெச்சிக்கொண்டு இருக்கிறோம்… என கஸ்தூரி சார் உணர்ந்து கொண்டபோது அவருக்குக் கல்யாணம் ஆகி வயதும் கணிசமாகக் கடந்திருந்தது. குழந்தை எதுவும் இல்லை. கணபதி அவரை மதிக்கவில்லை. அவர் அவள்கிட்டே வந்தாலே அவளுக்கு ஓர் ஒவ்வாமை ஏற்பட்டது. காலப்போக்கில் இது சரியாகி விடும் என அவர் எதிர்பார்த்தார். நம்பினார். ஆசைப் பட்டார்.

கல்யாணம் என்றுகூட இல்லை. கல்லூரி அளவில் கூட அவருக்கு சிநேகிதரகள் இல்லை. அவரது வயதுக்காரர்கள் அவரைப் பார்க்கிற பார்வையில் ஓர் அலட்சியம், எகத்தாளம் இருந்தது. அவரையே கண்டுகொள்ளாத அளவில் அவரே அருகில் இல்லாத அளவில் அவர்கள் நடமாட்டம் இருந்தது.

பெரும்பாலும் தனிமையே அவருக்கு வாய்த்தது. அலுவலக சிறு இடைவேளையில் அவர்கள் காபி, டீ என்று வெளியே கிளம்பிப் போனால், அவரைக் கூப்பிடுவதே இல்லை. அவர்கள் எல்லாரையும் விட அவர் சீனியர். தலைமை அலுவலர். என்றாலும் அவர்கள் நாலைந்து பேராய் மொத்தமாய்க் கிளம்பி வெளியே போனால் அவரிடம் சொல்லிவிட்டு ஆனால் ஒரு மரியாதைக்குக் கூட அவரை “நீங்களும் வரீங்களா சார்?” என்று கூப்பிடாமல் போனார ர்கள். கை கட்டைவிரலை வாயைப் பார்க்கக் காட்டி “டீ சாப்பிட்டுட்டு வரோம் சார்” என்று வெளியேறினார்கள்.

எழுந்து அவரும் அவர்கள் கூடப் போய் வந்தால் எத்தனை நன்றாக இருக்கும். சூடான டீயை டம்ளரில் சுழற்றிக் கொண்டே நாலு வார்ங்த்தை வேடிக்கையாகப் பேசலாம். கண்ணில் படும் இளம் பெண்களை நோட்டம் விடலாம். யாராவது சிறு குரலில் எதாவது அந்தப் பெண்ணைப் பற்றிக் கிண்டலாய்ப் பேசுவார்கள். வாழ்க்கை ரசனையின் பாற்பட்டது.

அவருக்குதான் இது எதற்குமே கொடுப்பினை இல்லை. இவர் தலையாட்ட எல்லாருமாய் வேளியே கிளம்பிப் போவார்கள்.

கணபதி இப்போதெல்ரலாம் பேசுவதையே நிறுத்தி விட்டாள். இந்த ஆளோடு என்ன பேச என்று அவள் நினைத்திருக்கலாம். அவர் வந்து வாசலில் கதவைத் தட்டினால் அவள் வந்து கதவைத் திறந்த ஜோரில் அவளிடம் யோசனைகளே வறண்டு போய் ஒரு வெறுமை மேடுதட்டி விடுகிறது.

கல்யாணம் ஆகி பத்து வருடத்தில் கஸ்தூரிக்கு முதல் முறையாக நெஞ்சுவலி வந்ததாகச் சொன்னார்கள். அப்போது நாங்களே வேலைக்கு வரவில்லை. யாரிடமும் பேசாமல் மனம் விட்டுப் பழகாமல் தனக்குள் இறுகிக் கிடந்தார் அவர். அலுத்துக் கிடந்தார். அவர் இந்த அறையில் இருந்தால் கணபதி பக்கத்து அறையில் டிவி பார்த்துக் கொண்டிருப்பாள். வடிவேலு காமெடி அவளுக்குப் பிடிக்கும். அவனது நடிப்பையும் காட்சிகளையும் பார்த்து சத்தமாகச் சிரித்துக் கொண்டிருப்பாள். தூக்கம் கலைய எழுந்து வந்து அவர்  பார்த்தால் சட்டென்று எதோ தவறு நடந்து விட்டாற் போல அவள் எழுந்து நின்று திருதிருவென்று முழிப்பாள். அவருக்கு வருத்தமாய் இருக்கும். சரி அவளாவது மனம் விட்டுச் சிரித்து சிறிது சந்தோஷமாய் இருக்கலாம். அதைக் கெடுத்து விட்டேன் என்று இருக்கும்.

உண்மையில் அவருக்கும் வடிவேலு காமெடி பிடிக்கும் என்று தெரிந்ததும் அவளுக்கு வடிவேலுவையே பிடிக்காமல் போய்விட்டது.

முழுக்கவே அத்தனை மனிதர்கள் மத்தியில் அவர் தனியாய், தனியொரு நபராய் வாழ்கிறதைத் தாள முடியவில்லை அவரால். அவர் தனக்குள் அழுது பெருக்குகிறவராய் இருந்தார். தனிமைக்கும் அதற்கும் தான் மாத்திரம் போய் ஒரு சிகரெட் பற்ற வைத்தபடி வெளியே நின்றுவிட்டு வருவார். அதுவும் போதாமல் சில ச மயம் கழிவறை போய் அழுதுவிட்டு வர நேர்ந்ததும் உண்டு.

கஸ்தூரி சாருக்கு திடீரென படபடப்பாய் இருந்தது. அதான் நெஞ்சுவலி என்று தெரியாது. சட்டென்று உடம்பே நடுங்கி வியர்த்துக் கொட்டியது. பெரும்பாலான நெஞ்சுவலிகள் வாயுப் பிடிப்பாகவே சொல்லப் படுகின்றன. அப்போது அவர் வீட்டில் தான் இருந்தார். படுக்கையறையில் இருந்து ஒரு விநோத சப்தம் கேட்டு வந்து பார்த்தாள் கணபதி. படுக்கையில் அவர் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு உருண்டு கொண்டிருந்தார். அவரது நிலையைப் பார்த்ததுமே அவளுக்கு எதோ சரியில்லை என்று புரிந்து விட்டது. பதறிப்போய் வாசல் கதவைத் திறந்துகொண்டு பக்கத்து வீட்டுக்கு ஓடினாள். அவனை மாப்பிள்ளையாகப் பரிந்துரை செய்தவள் வீடு அது. சட்டென்று கணபதிக்கு பென்ஷன் ஞாபகம் வந்தது ஏனோ.

கஸ்தூரிக்கு அத்தனைக்கு வயது ஒன்றும் ஆகிவிடவில்லை.நாற்பத்தி ஐந்து ஆறு. அவ்வளவே  உடனே அடுத்த வீட்டுக்காரியின் கணவரும் கூட இன்னொருவருமாக – அவர் யார் நினைவு இல்லை இ,ப்போது… 24 மணி நேர ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போனார்கள். அங்கே நாலைந்து நாள் அட்மிட் ஆகி பிறகு சமநிலைப் பட்டு வெளியே வந்தார்.

என்னதான் பேச்சுவார்த்தை இல்லை என்றாலும் கணபதி தினசரி வந்து அவரைப் பார்த்துப் போக வேண்டியிருந்தது. நாலு வார்த்தை அந்த சமயத்திலாவது அவள் அவருடன் பேசி யிருக்கலாம். அவர் பேச வந்தாலும் அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். அட எனக்கு உடம்புக்கு  வந்ததே இவளாலதான்… என்று கடுப்புடன் கண்ணை மூடிக் கொண்டார் கஸ்தூரி.,

அது முதல் தாக்குதல். அடுத்த ஒன்றிரண்டு வருடத்திலேயே அவர் உடம்பு நலிந்ந்து விட்டது. காலை தினசரி எழுந்து கொள்ளும் போதே மகா அலுப்பாய் உணர ஆரம்பித்திருந்தார், தண்ணி அடித்தாற் போல கடும் தலைவலி இருக்கும்.. வாழ்வின் கசப்பை உணர உணர தேகமும் அதற்கேற்ற அளவில் அலுப்பு காட்டியதோ என்னவோ.

போகப்போக எதிலும் பிடிப்பு கழண்டுகொண்டு கசப்பும் வெறுப்பும் உள்ளே வந்து மண்டியது. யாரைப் பார்த்தாலும் கோபமும் எரிச்சலும் பட ஆரம்பித்தார். தினசரி செய்யும் சிறிய காரியங்களுக்கே அவருக்கு மலைப்பு தட்டியது. இங்கே எதுவும் சரியில்லை. என்னை யாரும் மதிக்கிறதில்லை… சட்டுச் சட்டென்று அவருக்குக் கோபம் வந்தது. அலுவலகத்தில் எப்போதுமே அவர் ஒருவித திகைப்புடன் நடமாடினார்.

இரண்டாலது முறை அவருக்கு நெஞ்சுவலி வந்ததா தெரியாது. ஆனால் அலுவலகத்தில் இருக்கும்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை மறக்க முடியாது. அலுவலகத்தில் மும்முரமான வேலை நேரம் அது. திடுதிப்பென்று எதற்கோ எழுந்த கஸ்தூரி ஒரு விநோத ஊளையை வெளியிட்டார். சட்டையை நெஞ்சுப் பகுதியில் பிடித்துக் கொண்டபடி திரும்ப நாற்காலியின் பள்ளத்தில் சரிந்து உட்கார்ந்தார். கண்கள் மூடிக் கிடந்தன.

எல்லாரும் ஓடிவந்து அவரைச் சூழ்ந்து கொண்டார்கள். அதில் ஒருத்தர் “அவருக்குக் காத்து விடுங்கப்பா” என்று கூட்டத்தை விலக்கி விட்டார். ‘‘என்ன பண்ணுது சார்?” என்று யாரோ கேட்டார்கள். “ம்ம்… மு… டியல.” அவர் யாரையும்  பார்க்கவில்லை. அவரால் பார்க்கவும் முமடியவில்லை.

“ஹார்ட் அட்டாக் மாதிரி இருக்கேப்பா.”

கஸ்தூரி வாய் பிளந்து ஹா ஹாவென்று மூச்செடுத்துக் கொண்டிருந்தார். இதயத் துடிப்பு எகிற உடம்பு முழுதும் தோலுக்குள் இரத்தம் பீரிட்டுக் கொண்டிருந்தது. முகமே ஜிவ்விட்டுக் கிடந்தது. உடம்பு தடதடவென்று ஆடிக் கொண்டிருந்தது. அதற்குள் ஓர் ஆ,ட்டோ அலுவலக வாசலில் வந்து நின்றது. கஸ்தூரி மார்பைத் தாங்கியபடியே மெல்ல நடந்து போனார். எங்கள் அலுவலக மேலாளர் கூட ஏறிக் கொண்டார்.

எல்லாரும் அவர் நலமாகத் திரும்பி வருவார் என்றுjன் நினைத்திருந்தோம்.

இரண்டுநாள் தாண்டி ஒரு ஞாயிற்றுக் கிழமை அலுவலக நண்பர்கள் நாலைந்து பேராக அவரைப் பார்க்கப் போனார்கள். போகும் வழியிலேயே கஸ்தூரி சொல்லச் சொல்ல கேட்காமல் பெரிய ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தார்கள். எங்கள் மேலாளர் தான் இருந்த ஒரு பெரும் தொகையை கூகுள்பே மூல்ம் செலுத்தி அட்மிட் செய்திருக்கிறார்.

ஏழு எட்டு மாடிக் கட்டடம். லிஃப்ட் இருந்தது. “ஏல எல்லாத்துக்கும் சேத்துல்லா காசு கெட்டணும்…” என்று ஒருத்தர் சொல்ல எல்லாரும் சிரித்தார்கள். ஐந்தாவது மாடியில் இருந்தார் கஸ்தூரி. அவரே ரொம்பவும் பயந்திருந்தார். அதிகம் பேச அவரால் முடியவில்லை.

“என்ன செலவாகுதோ ஆகட்டும். நல்லபடியா உடம்பு தேறி வாங்க…” என்று ஒருத்தர் சொல்ல தலையாட்டினார். “பெரிய ஆஸ்பத்திரி…” என அவர் எதோ சொல்ல வந்தபோது அடுத்தவர், “அட இருக்கட்டும். அவசரம்னு வந்தது. நல்ல ஆஸ்பத்திரி.  பெரிய பெரிய வி ஐ பி எல்லாரும் இங்க வர்றாங்க… உங்களுக்கு என்ன பிள்ளையா குட்டியா? நாங்க கவலைப் பட்டா பரவால்ல. நீங்க கவலைப் படறதா?” என்றார்கள்.

“இங்க உங்களை எப்பிடி கவனிக்கறாங்க? இந்த கவனமும் அக்கறையும் வெளிய கிடைக்குமா?”

“அதென்னலோ வாஸ்தவம்தான்…” என்றார் கஸ்தூரி.

அவர் பக்கத்தில் இதயத் துடிப்பு அளக்கும் ஈசிஜி கருவி ஒடிக் கொண்டிருந்தது. பச்சை நரம்புகள் கோலம் போட்டாற் போல ஓடிக்கொண்டு இருந்தன.

எதிர்பாராக நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அன்று காலைச் செய்திகளில் ஒரு பிரபல அரசியல்வாதியின் வீட்டில் ரெய்டு என்று  செய்தி ஓடிக் கொண்டிருந்தது  முதலில் அது யாருக்கும் பேரிய விஷயமாய்ப் படவில்லை. ஆனால் மேலாளருக்கு ஒரு யோசனை இருந்தது.

இந்த இரண்டு நாட்களில் கஸ்தூரிக்கு மனதளவில் தெம்பு  வந்திருந்தது. மேலாளர் போய்ப் பார்த்துவிட்டு வந்து தகவல் சொன்னார். டாக்டர்கள் நன்றாக அவரை கவனித்துக் கொள்வதாகவும் சரியான இடத்தில் சரியான நேரத்தில் மேனேஜர் அவரை அட்மிட் செய்ததற்கு நன்றி தெரிவித்ததாகவும் சொல்லி யிருக்கிறார்.

ரெய்ட் என்று ஆரம்பித்து அந்த அரசியல்வாதி கைதாகும் நெருக்கடியும் உருவானது. விவகாரம் மேலும் சிக்கலாகும் என்று இருந்தது.

சிக்கல் அந்த அரசியல்வாதிக்கு அல்ல. பின் யாருக்கு?

விசாரணை நெருக்கடியில் இருந்து தப்பிக்கவும், அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி யோசிக்கிற அவகாசம் தேவையாய் இருப்பதாலும்… திடீரென்று அந்த அரசியல்வாதி ஒரு காரியம் செய்தார்.

அவருக்கு நெஞ்சு வலி வந்தது. யாரும் எதிர்பாராமல் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு அவர் துடிக்க ஆரம்பித்தார். (அவரே எதிர்பார்த்திருக்கவில்லை)

கஸ்தூரி அட்மிட் ஆகியிருந்த அதே ஆஸ்பத்திரி பரபரப்பானது. மருத்துவர்கள் பரபரப்பானார்கள். கஸ்தூரிக்கு எதுவும் விளங்கவில்லை. அவர் சிகிச்சை பெற்றுவந்த மாடிக்கு மேல்மாடியில் அந்த அரசியல்வாதி வந்து அட்மிட் ஆனார் என்று தெரிந்து கொண்டார்.

அந்த ஆஸ்பத்திரியின் அத்தனை மருத்துவர்களும் அவரை கவனித்துக்கொள்ள ஓடினார்கள். திடீரென்று அந்தச் சூழலே மாறிப்போனது. அவரை கவனிக்க அவர் பக்கத்தில் யாருமே இல்லை. அதுவே அவருக்கு பயமாய் இருந்தது. அடப்பாவிகளா, உண்மைலயே நெஞ்சுவலி என்று வந்தவனை அப்ப்டியே விட்டுவிட்டு எல்லாரும் அரசியல்வாதியை கவனிக்கப் போய்விட்ட்டார்கள்.

திடீரென்று தனித்து விடப்பட்டாப் போல அவருக்குத் திகிலாய் இருந்தது.

•••

Comments

Popular posts from this blog