
சிறுகதை பூ உதிர்ந்த ரோஜாச் செடி எஸ். சங்கரநாராயணன் கிராமத்தில் அவனவன் வேலை வெட்டி இல்லாமல், பார்ட் டைம் லவ், ஃபுல் டைம் லவ்னு திரிகிறான் . வேலுமணியும் அவன் சம்சாரமும் நேரிலேயே வந்து பாக்கு வெத்திலை வைத்து அழைத்தார்கள். அவன் தங்கைக்குக் கல்யாணம். பாவாடை தாவணியுடன் விசுக் விசுக்கென்று வீட்டில் நடமாடிக் கொண்டிருப்பாள். கிருஷ்ணாவும் மணியும் பேசிக்கொண்டிருக்கும்போது தாண்டிப் போக நேர்ந்தால் முகமெல்லாம் வெட்கம் பரவிக் கனியும். காலம் எப்படி வேகமெடுத்து ஓடுகிறது. அப்பாவுக்கு மணியைப் பிடிக்கும். காலில் வாதம் வந்தபிறகு அதிகமாய் எழுந்து அவர் நடமாடக் கொள்ளவில்லை. இவனும் அவரை வேலைக்குப் போகவேண்டாம் என்று சொல்லிவிட்டான். வாசல் பார்க்க காற்று வாங்கியபடி சாய்வுநாற்காலியில் உட்கார்ந்தவர் ''கிருஷ்ணா? யார் வந்திருக்காங்க பார்!'' என்றார் உற்சாகமான குரலில். சென்னையில் இருந்து திருச்சி ஒரு ராத்திரி தூரம். அவன் சம்சாரமும் எதோ ஜவுளிக்கடையில் வேலை பார்க்கிறாள். என்றாலும் மாதம் ஒரு தடவையாவது திருச்ச...