Posts

Showing posts from September, 2022
Image
  நிசப்த ரீங்காரம் • சிந்தனைத் தொடர் • பகுதி 11 பரமஹம்ச ரகசியம் ஞானவள்ளல் • எ ண்பதுகளில் திரு வலம்புரி ஜானின் ‘தாய்’ வார இதழின் ஒரு சிறப்பிதழுக்காக எழுத்தாளர் ஆர். சூடாமணியிடம் ஒரு சிறு பேட்டி எடுத்தது நினைவு வருகிறது. மிக அருமையான மனிதர் அவர். அப்போதுதான் நான் இலக்கிய இதழ்களில் கதைகள் எழுத ஆரம்பித்தேன். பெரும் சுற்றிதழ்களில் அமோக வலம் வந்து, பிறகு புகழ்மோகம் விடுபட்டு நான் இலக்கிய இதழ்கள் பக்கம் என்னை அடையாளப் படுத்திக்கொள்கிற கவனத்துக்கு வந்திருந்தேன். தபால் தந்தித் துறையில் பணி அமருமுன்னால், என் கல்லூரிப் படிப்பு முடித்த ஜோரில், நான் கேரளம், கொல்லத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலையமர்ந்தேன். என் மாமா பார்த்து அமர்த்திய வேலை அது. நன்றி மாமா. வேலை நேரம் தவிர கிடைத்த தனிமையில் நான் ஆங்கில நாவல்கள் வாசிப்பதை மேற்கொண்டபோது, அருமையான உலக இலக்கிய நூல்களைப் பரிச்சயப் பட்டேன். என் சித்தி மருமகள், அண்ணி திருமதி காயத்ரி ஹரிஹரன் மூலம் ஆங்கிலத்தில் வாசிக்க ஆரம்பித்திருந்தேன். நன்றி அண்ணி. எழுத்தின் தாத்பரியம் என்ன, என கண் திறந்த வேளை எனக்கு அது. வணிக இதழ்க் கதைகளுக்கும், இலக்கிய மு