Posts

Showing posts from 2019
Image
நன்றி காணிநிலம் சிற்றிதழ் இலக்கியத்திற்கான நோபல் பரிசு 2018 பெற்ற எழுத்தாளரின் சிறுகதை எழுத்தாளருடன் ஒரு மாலை ஓல்கா தோகர்சுக் (போலந்து) ஆங்கிலத்தில் ஜெனிஃபர் குரோஃப்ட் ஆங்கிலம் வழி தமிழில் எஸ்.சங்கரநாராயணன் ----  அ வளது சிறந்த யோசனைகள் இராத்திரிகளில் அவளுக்கு வாய்த்தவையே. பகலைவிட இராத்திரியில் என்னவோ அவள் ஆளே வேறு ஆளாகிப் போனாப் போல. அதைச் சொன்னால், சும்மா அப்படியே சொல்லிட்டிருக்கே, என்றிருப்பான் அவன். நான் என்கிறாப் போல தன்னை முன்னிறுத்தி வேறெதாவது பேச ஆரம்பித்திருப்பான். நான்... பகலில் தான் தெளிவாக சிந்திக்கிறேன். அதுவும், காலைகளில்... எனது முதல் காபியை நான் அருந்திய பிறகு... நாளின் முதல் பாதியில்... தற்செயலாக, (ஓ கடவுளே, என்னவோர் சங்கடமான தற்செயல் அது) செய்தித்தாளில் அவள் வாசித்தாள். பெர்சியா, அலன்ஸ்டெயின்   என்று அவன் பயணம் மேற்கொள்ள விருக்கிறான். அவளுக்கு அத்தனை கிட்டத்தில் வருகிறான் என்பது அவளது தூக்கத்தைக் கெடுத்து விட்டது. எல்லாமே ஒட்டுமொத்தமாக அவளிடம் திரும்ப வந்து சேர்ந்தாற் போலிருந்தது. திரும்பி வந்தன என்றுகூட இல்லை. அவை அவளுடனேயே நினைவுமங்காமல் இ
Image
14 12 2019 ஜெயந்தி ஜெகதீஷின் ‘ரெஜிஸ்தர் ஆபிஸ் மசிகுண்டு’ சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டு விழாவில் வாசித்தளித்த உரை. * ஓடிக் கொண்டிருக்கும் நதி எஸ்.சங்கரநாராயணன் அ றிவிற் சிறந்த இந்த அவைக்குத் தலை வணங்குகிறேன். தோழி ஜெயந்தி ஜெகதீஷ் எனக்கு ‘வாசிப்போம்’ குழுவின் முதலாம் ஆண்டு நிறைவு விழாவில் உரையாளராக அறிமுகம் ஆனவர். ஓரளவு சுய சிந்தனையும், நோக்கும் போக்கும் கொண்டவராகவே தெரிந்தது. இந்த ஆண்டின் எங்கள் ‘இருவாட்சி இலக்கியத் துறைமுகம்’ பொங்கல் மலரில் அவர், அண்ணாச்சி கி.ரா.வின் பெண் பாத்திரங்கள் பற்றி ஒரு கட்டுரை எழுதி யிருக்கிறார், நான் கேட்டபடி. நல்ல கட்டுரை அது. பெண்கள் தங்களைப் பற்றிப் பேச வேண்டும். பேச முன்வர வேண்டும். அவர்கள் ஆண்கள்காட்டும் பெண்களைப் பற்றியும் பேச வேண்டும். ஆண்களின் கதைகளில் ஆண்கள் தங்களைவிட பெண்களையே அதிகம் பேசுகிறார்கள், உற்சாகமாக... என பல சமயம் நான் நினைப்பது உண்டு. அவை எல்லாமே ஓரளவு (வாய் பிளந்த) யூகங்கள் தான், என்றும் யோசிப்பது உண்டு. பெண்கள் தங்களைப் பற்றி எழுத முன்வர வேண்டும். எழுத்தில் பெண் எழுத்து ஆண் எழுத்து என்று உண்டா, என்றால் ஏன் இல்லாமல்,
Image
நாலு விரற்கடை எஸ்.சங்கரநாராயணன்  * நே ற்றே செல்வராஜிடம் போய்ச் சொல்லிவிட்டு வந்திருந்தாள். “வீட்டுக்கே வந்திட்டியா?” என்றான் அவன் எரிச்சலுடன். அவள் திரும்பவும் அவனைப் பார்த்து ஒரு பலவீனமான புன்னகையை வீசினாள். “அதான்... பாத்து செய்யி செல்வா. ரொம்ப கஷ்டம்...” அப்பவும் செல்வராஜ் “வீட்டுப் பக்கம் வராதே” என்றான். பின் அவளைப் பார்த்து இரக்கப் பட்டாப் போல “நாற்பது நாற்பத்தியஞ்சுன்னா வேண்டாங்கறாங்க மாலதி. நான் என்ன செய்யட்டும்?” என்றான். “நீ ஏன் வயசச் சொல்றே?” என்று சிரித்தாள், நகைச்சுவையாகப் பேசுகிற பாவனையில். அவனும் விடாமல் “நான் சொல்ற வயசே, கம்மியாத்தான் சொல்றேன்...” என்றான். உண்மையில் அவளுக்கு இன்னும் வயசு நாற்பதே தாண்டவில்லை. ஆனால் வறுமை உடலை நெகிழ்த்தி அயர்ச்சி காட்டியது. சிறு பவுடர் என்கிற அலங்காரங்கள் கூட ஒட்டவில்லை. அவள் புடவை கட்டினால் கொடிக்கம்பத்தில் கொடி போல் இருந்தது. அவன் பேசுகிறதைப் பார்த்தால் நல்ல வார்த்தை சொல்வான் என்று தோன்றவில்லை. யாரிடமும் இரந்து இப்படி கேட்டுநிற்பது அவளுக்குப் பிடிக்காது. ஆனால் காலம் திரும்பத் திரும்ப அவளை அப்படித்தான் மண்டியிட வைத்தது.