Posts

Showing posts from November, 2015

இளமைக் கதை - உலருமுன் பனித்துளி

Image
உ ல ரு மு ன்  ப னி த் து ளி எஸ். சங்கரநாராயணன்   சு தாகர் நைன்த் பி. கடையில் மேப் வாங்கப் போனால் தோழியுடன் அவள். லதா. நைன்த் சி. அவள் கையில் தகதக பொலிவுடன் தங்கப் பேனா.       “இந்தப் பேனா எவ்ளோ?“       “நூத்தியம்பது ரூவா…“       “அவ்ளவா?“ என்று அழகாய் வெட்கப்பட்டாள். திரும்ப வைத்தாள். திரும்பி தன் தோழியிடம் “ரொம்ப அழகா இருக்கில்லே?“ என்றாள்.       உன்னை விடவா, என நினைத்தான் சுதாகர். தலையில் ரோசாப்பூ செருகியிருந்தாள். அது பின்பக்கம் என்றால், முன்பக்க ரோசாப்பூ… உன் உதடுகள்… என ஒரு திகட்டலுடன் நினைத்தான். என்ன வாங்க வந்தோம் என்றே அவனுக்கு மறந்திருந்தது. அது நேற்று.       இன்று இது. பள்ளிக்கூடம் விட்டு அவனும் சிவகுமாரும் சைக்கிளை எடுக்கிறார்கள். அவன் பக்கமாக சைக்கிளை உருட்டி அவள். சட்டென அவனை நிமிர்ந்து ஒற்றைப் பார்வை. திரும்பிக் கொண்டாள். உன்னை எனக்கு, ஓ தெரியுமே, என்கிற பார்வை. அவன் எதுவும் பேசியிருக்கலாம். அவன் பேச அவள் எதிர்பார்த்தும் இருக்கலாம். சே விட்டுவிட்டேன், என தாமதமாய் வருத்தமாய் இருந்தது.       பாடம் நடத்துகையிலேயே பாதியில் தூங்கிவிடும் சுதாகர். ராத்த

எனக்கு வயதாகி விட்டது

Image
எனக்கு  வயதாகி விட்டது • • • வே க வேகமாக மாறி வரும் உலகம். எலக்ட்ரானிக் உலகம். மின்னணு சாதனப் பொருட்களால் வீடு நிரம்பிக் கிடக்கிறது. துவைப்பது முதல் பாத்திரம் கழுவுவது வரை… இது நாம் பார்த்த உலகமா? நமது வேலைகள் என மனிதன் செய்ய எதுவுமே இல்லையா? 2 கண் முன்னே நம் குழந்தைகள் நம்மை விட பெரும் பணம் ஈட்டுகிறார்கள். செலவுகளும் அவ்வளவில் பெரும் வீச்சாய் இருக்கிறதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இது அவர்களின் உலகம். இதுகுறித்து நாம் சொல்ல எதுவும் இருக்கிறதா? அவர்களின் அந்த, பணக்கார உலகம், நமக்கு அது விளங்குகிறதா? 3 ஜக்கி வாசுதேவ் சொல்கிறார். நாம் சின்ன வயசில் ஆசைப்பட்டு இழந்ததை நம் குழந்தைகள் மூலம் நிறைவேற்றிக் கொள்ள நினைக்க வேண்டாம். அது நாம் தோற்றுப்போன உலகம். அதை நாம் அவர்களிடம் திணிக்க முற்பட்டால், நம் தோல்வியை குழந்தைகள் சட்டெனக் கண்டு கொள்வார்கள். 4 நம் குழந்தைகள் நம் அடையாளங்களுடன், நம் குடும்ப அடையாளங்களுடன், நம் கலாச்சார அடையாளங்களுடன்… இதெல்லாம் சரியாக வந்திருக்கிறதா? ஒரு நிர்ப்பந்த அடிப்படையில் நாம் அதைக் கொண்டுவர முயல்வது சாத்தியமா? உலகம் சுருங்கிவிட்ட காலம்.