Posts

Showing posts from June, 2019
Image
குறுந்தொடர் ராகு கேது ரங்கசாமி எஸ்.சங்கரநாராயணன் • மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பக்கமாய் இருக்கிறது சபேசனுடைய ஜாகை. சித்திரக் குளம் அருகே மகாதேவ (சாஸ்திரி) தெரு. இப்போது அவர் வெறும் மகாதேவன். சாஸ்திரி அல்ல. வால் இழந்த நரி. மாற்றங்கள். தெருவுக்குப் பழைய அடையாளங்கள் அழிந்து புதிய அடையாளங்கள் வந்திருக்கின்றன. தெரு துவக்கத்தில் ஆவின் பூத். முன்போ அங்கே மாடுகட்டி அதிகாலை நாலு நாலரைக்கெல்லாம் நுரைக்க நுரைக்கப் பால் கறப்பார்கள். விடியலின் தளிர் வெளிச்சத்தையே அவர்கள் இப்படி சர்ர் சர்ரென்று பாத்திரத்திற் பிடிக்கிறாற் போலிருக்கும். தெருவில் இப்போது உயரமாய் கட்டடங்கள் எழுந்துவிட்டன. இத்தனை காலமாய் அவற்றை யாரோ காலால் அழுத்தி பூமிக்கு அடியிலேயே ஒளித்து வைத்திருந்தார்கள். அதிரடியாய் மாற்றங்கள். விரல் சொடுக்கும் பொழுதுக்குள் மாற்றங்கள் வருவதைப் பற்றிக் கூட இல்லை. ஆனால் அது ஆக்கிரமிக்கும் விரைவு, மலைப்பாய் இருக்கிறது. ஒரு பத்து பதினைந்து வருடம் முன்னே இந்த டேப்-ரிகார்டரும் சி.டியும் தொலைக்காட்சியும், விசியாரும் இத்தனை பரவலாய்ச் சீரழியும் என்று யாராவது கனவாவது கண்டோமா? ஆளாளுக்கு