Posts

Showing posts from August, 2016
Image
shortstory புலிக்குகை எஸ்.சங்கரநாராயணன் • மிக மிகத் துயரமான கண்ணீர் ஒரு கருப்பு நங்கையின் கண்ணீர்தான் ஏனனில் அவளை அழ வைப்பது ழழா சுலபமல்ல அவள் மகனை அவளிடமிருந்து எடுத்துச் செல் … … ஒரு பிஎச்.டி. பட்டத்துடன் ஓட்டலில் உணவு பரிமாறச் செய் … … கண்ணீர் பெருகும் உள்ளுக்குள் ரத்தச் சிவப்பாக அவள் கணவனை அவளிடமிருந்து பிரித்து வை சமையல் அறையிலேயே சாக வை … ஆயினும் வெள்ளையனே நீ அவளிடமிருந்து கண்ணீரை மட்டும் பெற முடியாது ஏனெனில் அவள் துயரங்களின் அரசி – (1) அவர்கள் வந்தபோது மகாகவி எழுதிக் கொண்டிருந்தார். மேலே தொங்கிய மண்ணெண்ணெய் விளக்கின் குறு வெளிச்சம் காற்றுக்கு ஆடியாடி மேசையில் விழுந்தது. கவியின் கிழிந்த கோட்டின் தோள்ப்பக்கம் வெளிச்சத்தில் தெரிந்தது. நஞ்சுண்டேஸ்வரன் உள்ளே வந்தவாறே “வெளிச்சம் போதவில்லை அல்லவா?” என்றார். மகாகவி திரும்பவில்லை. “ஆனால் நாடே அல்லவா இருளில் கிடக்கிறது?” என்றார் அவர். “இருட்டு நமது நிறம். நிகழ்காலத்தின் நிறம். வெளிச்சத்தின் வெள்ளையோ வேறுப்புக்குரியது.” கிண்கிணி நாதமாய் ஒரு பெண்ணின் குரல். மகாகவி வியப்புடன் திரு