Posts

Showing posts from December, 2020
Image
  2006ம் ஆண்டின் சிறந்த நாவல்   நீர்வலை எஸ்.சங்கரநாராயணன் 15 மனிதர்கள் கடலில் வலைவீசி மீன் பிடிக்கப் போனால், கடல் அலைவீசி மனிதனைப் பிடிக்க ஊருக்குள் வந்திருந்தது. இது அலை வலை. நீர் வலை. மதங்கொண்ட யானைபோல, அலை முட்டிஇழுத்த ஜோரில், பிய்ந்தும் நைந்தும் பயன்படாதுபோன பொருட்களை உதறி, தூ என அலட்சியத் துப்பல் துப்பி விட்டு, கடல் மீண்டும் திரும்பிப் போனாப் போல. கடலின் ஆக்ரோஷத்துக்கு எதுதான் தப்பித்தது... மரங்களே பெயர்த்தெடுக்கப் பட்டு மிதக்கின்றன. எத்தனை மனித உடல்கள், கட்டில்கள், பீரோக்கள், வீட்டு சாமான்கள், பெட்டிகள்... என்று திறந்தும் திறக்காமலும் கரைகளில் கிடக்கின்றன. கடலில் அடித்துப் போயிருக்கின்றன. வரதட்சிணைக் கொடுமைக்கார மாப்பிள்ளை போல. ஊர் மறுபடி அவலஊளையுடன் விழித்துத் தன்னிலை திரும்புகிறது. எங்கெங்கு பார்த்தாலும் ஒப்பாரிச் சத்தம். மரண ஓலம். வலியின் அழுகை. இழப்பின் புலம்பல். துயரத்தின் பைத்தியக்கார கையறு நிலை. கடல்கரை ஓரம் குழந்தைகளை, தத்தம் பிரிய உறவினர்களை, அவர்கள் தேடித் திரிகிறார்கள். கிளிஞ்சல்கள் தேடி அலையும் விளையாட்டு கண்ட கரைகள், இப்போது அந்த அ
Image
  2006 தமிழக அரசு பரிசு பெற்ற நாவல்   நீர்வலை எஸ்.சங்கரநாராயணன் 14 எ ங்கோ, கடல் அடியில் ஏற்பட்ட பூகம்பம்.... நிலப்பகுதியில் நிகழ்ந்திருந்தால் நிலைமை மேலும் கொடூரமாய் ஆகியிருக்கும் போலிருக்கிறது. இத்தனைதூரம் தள்ளி, நம்ம ஊரிலேயே ஒரு ஆட்டம் ஆடிட்டதுன்னா பெரிய அதிர்ச்சிதான், என நினைத்தான். சிவாஜிக்கு பயமாயும் சுவாரஸ்யமாயும் இருந்தது. அவன் போகும் வழியாவிலும் ஜனங்கள் பூகம்பம் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தார்கள். நம்ம நாட்டிலேயே இதற்குமுன் வந்த பூகம்பம் பற்றி - எதோ லட்டூராமே - எங்கருக்கோ?... பேரைப் பார்த்தால் திருப்பதி பக்கம் போலிருந்தது - அவர்கள் பேசிக்கொண்டார்கள். அப்போது லட்டுக்கணக்கான - ச்சீ, லட்சக்கணக்கான ஆட்கள் செத்துப் போனார்களாம். பொதுவாக ஊர் ஆபத்தின் சாயலே இல்லாமல்தான் இருந்தது. வெயில் உக்கிரப்பட்டு சுற்றுலாப் பயணிகள் விடுதிகளில் அடங்கியிருந்தார்கள். சிலர், வந்தமா, தேவாலயத்தைப் பார்த்தமா, என்று கிளம்பிப் போய்விட்டிருந்தார்கள். அவர்கள் வெறிபிடித்தாப்போல ஒரேநாளைக்கு டஜன்சாமி பார்ப்பது என்று பஸ் கட்டிக்கொண்டு டூரில் வந்தவர்கள். நிறைய பேர் இந்துக்கள். பார்க்கிறது வேடிக்கை.
Image
  2006 ம் ஆண்டின் சிறந்த நாவல் - தமிழக அரசு பரிசு   நீர்வலை எஸ்.சங்கரநாராயணன் 13 தே வாலய வாசல்பகுதிகளில் உயரமாய் நிழல் வசதி பண்ணியிருந்தது அம்பது நூறு மீட்டர் அளவு. ஓரங்களில் நிறைய கடைகள். பெரிய பெரிய மாலைகள் கட்டிக் கொண்டு - ஏற்கனவே சிலுவையில் சிரமப்படும் யேசு... ஆளுயர மாலை! - ஆளுயர அளவு கூட மெழுகுவர்த்திகள் விற்பனைக்குக் கிடைத்தன. மெழுகுவர்த்தி ஓ.கே. உலக்கை போல. யானைத்தந்தம் போல அடுக்கப்பட்டோ நெட்டுக்குத்தலாக நிறுத்தப்பட்டோ பார்வைக்கு வைத்திருந்தார்கள். பொரி, கருப்பட்டி மிட்டாய், பனைஓலைகளில் தொப்பிகள், பல்வேறு ஒலிநாடாக்கள், குறுந்தகடுகள்... சிஸ்டர் நௌரோஜி முதல், ஜாலி ஆபிரஹாம், ஜேசுதாஸ், மற்றும் குரல் உள்ள யாரெல்லாமோ, பாடத் தெரியும் என நம்புகிற யாரெல்லாமோ, துட்டு கையில் புரள்கிற, பாட்டு ஆசையுள்ள யாரெல்லாமோ பாடிய ஒலிநாடாக்கள் கிடைத்தன. அந்த ஒலிநாடாக்களில் ஜிஞ்சிருஜிங்சிங் என்று கிதார் அதிர்வு அதிகமாய் இருந்தது. வளாகத்தில் எந்தக் கடையிலாவது எப்பவும் பாட்டு ஒலித்துக் கொண்டே இருந்தது. சிலாட்கள் எப்பவும் வெத்திலை பாக்கு அதக்கித் திரிவான். அதைப் போல... பொதுவான ஒலிநாடாக்கள் தவிர, வைகறை