
உலகச் சிறுகதை பெ ய ர் க ள் ---------------------------------------- ஜான் அப்டைக் தமிழில் எஸ்.சங்கரநாராயணன் பா ஸ்டனில் இருந்து திரும்பி வருகிறார்கள். ஜாக் காரோட்டிக் கொண்டு வந்தான். அவனருகே முன்னிருக்கையில் ஒரு குழந்தைத் தொட்டில். மகன் அதில் உறக்கத்தில். பின்னிருக்கையில் கிளாரே. ஜோ என்கிற இரண்டு வயது மகளுடன். அவளுக்காக எதோ பாடிக்கொண்டிந்தாள். “வயலில் பட்டாணிகள் வெடித்தன. பறவைகள்?...” “கிங்...” என்றது குழந்தை. பாடின, சிங் என்று சொல்ல வரவில்லை அதற்கு. “உனக்குப் பட்டாணி பிடிக்குமே? எவ்ளோ ருசியா இருக்கும். அதை யாருக்குப் பண்ணித் தரணும்?” “கிங்” என்றது குழந்தை திரும்பவும். அவர்கள் சிங் கிங் என்று எதுகை வருகிறாப் போல எதுவும் பாடல் பாடியிருக்கலாம். “அருமை.” “பறவை மூக்கு, அந்தப் பாட்டு பாடும்மா.” “அதென்னடி பாட்டு? அந்தப் பாட்டு எனக்குத் தெரியாதே. எங்க பாடிக் காட்டு...” “எங்க பாடிக் காட்டு...” “நான் கேக்கறேன் உங்கிட்ட! பறவை மூக்கு பாட்டை யாரு பாடுவா? மிஸ் தூனி பாடிக் காட்டினாளா?” அந்தப் பெயரை ஒருமுறை சொன்னபோது ஜோ சிரித்தாப் போல இப்பவும் சிரித்தாள். மிஸ் தூன...