Posts

Showing posts from October, 2022
Image
 Amudhasurabi - Deepavali malar 2022 யாவரும் கேளிர் எஸ்.சங்கரநாராயணன்   எ ங்கள் எல்லாருக்குமே ஜெகதீச மாமாவை ரொம்பப் பிடிக்கும். மாமா சென்னையில் மத்திய அரசு வேலை பார்க்கிறார். இன்னும் ஐந்தாறு வருடத்தில் பதவி ஓய்வு பெற்று விடுவார். எப்பவுமே உற்சாகமான கலகலப்பான மனிதர். நாங்கள் யாருமே எதிர்பாராத அளவில் திடீர் திடீரென்று அதிகாலையிலோ முற்றிய இரவிலோ இங்கே மதுரை வந்து எங்கள் வாசல் கதவைத் தட்டுவார். இப்படி நேரங் கெட்ட நேரத்தில் விசிட் அடிப்பது என்றால் அவர்தான், என்று எங்களுக்குத் தெரியும். ஒருதரம் அம்மா தன் தங்கை ரேவதியுடன் அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தாள். ரேவதி திருநெல்வேலியில் இருக்கிறாள். பாதிப் பேச்சில் ரேவதி “யாரோ வாசல் கதவைத் தட்டறாப்ல இருக்குடி. இரு வரேன்…” என்று போய்க் கதவைத் திறந்தால்… ஜெகதீச மாமா திருநெல்வேலி போயிருந்தார். கதவைத் திறந்த ஜோரில் புன்னகையுடன் நிற்கிற மாமா. “என்ன பாஸ்கர் எப்பிடி இருக்கே?” என்றபடி செருப்பைக் கழற்றுவார். “என்ன மாமா திடீர்னு?” என்று அவரிடம் கேட்க முடியாது. “ஏன்டா நான் சொல்லிட்டு தான் வரணுமா?” என்று அதே புன்னகையுடன் கேட்பார். “திடீர்னு வந்தா அதுதான் மாம
Image
  ஆவநாழி – அக். நவ. 2022 இதழில் வெளியான சி’றுகதை Art - Jeeva ஆறுமுகத் தாத்தாவின் ஏழாவது முகம் எஸ்.சங்கரநாராயணன் தா த்தா இறந்து போனார். நேற்று இரவு ஒருமணி ஒண்ணரை மணி அளவில், எல்லா விளக்கும் அணைத்துப் படுத்திருந்த நிலையில் “ஏவ்?..” என்ற பெருத்த விக்கல் தாத்தாவிடம் இருந்து வந்தது. தொண்டையில் இருந்து ஓர் ஒலித் துள்ளல். சட்டென்று இவள், என் மனைவி கனகவல்லி விழித்துக் கொண்டு விளக்கைப் போட்டால் தாத்தா படுக்கையில் புழுவாய் நெளிகிறார். உள்ளறையில் கட்டிலில்    உறங்கிக் கொண்டிருந்த பாட்டியை எழுப்பித் தகவல் சொன்னோம். பெடஸ்டல் மின்விசிறி ஒன்று பத்திரிகை ஒன்றை விரித்து என்னவோ வாசித்துக் கொண்டிருந்தது. “என்னது?” எனப் பதறி எச்சில் வழிய எழுந்து கொண்டாள் பாட்டி. சட்டென எழுந்துகொள்ள அவளுக்குத் திகைத்தது. அத்தனை வெளிச்சத்திலும் அவளுக்குக் கண்ணில் இருட்டு கட்டியது. அவளுக்கும் வயதாகி விட்டது அல்லவா? அந்த வயதில் நல்ல தூக்கத்தைக் கலைத்து எழுப்பி விடுவது என்பது பெரும் அவஸ்தை. கைத்தாங்கலாக தாத்தா அருகில் அமர்த்தினோம். “என்ன செய்யுது உங்களுக்கு…” என்று முன்குனிந்து பாட்டி அவரது கையைப் பிடித்துக் கொண்டாள்