Posts

Showing posts from September, 2014
Image
எப்படியெல்லாம் சிந்திக்கிறார்கள்…  எ ன்ன சுவாரஸ்யமான முடிச்சு. மொழிபெயர்ப்புக் கதை ஒன்பது மைல் நடை ஹாரி கெமெல்மேன் ( அமெரிக்கா ) தமிழில் எஸ் . சங்கரநாராயணன் அரசு நற்பணியாளர் சங்கத்தில் அந்த இரவு விருந்தில் என் உரை ரொம்ப சொதப்பலாகி விட்டது . அதற்கப்பபுறம் என் நண்பன் நிக்கி வெல்ட் நாங்கள் சந்தித்துக்கொள்ளும் நீல நிலவு விடுதியில் வைத்து என்னை எள்ளி நகையாடிவிட்டான் . பொதுவாக நாங்கள் அரட்டையடிக்க என்று அங்கே கூடுவது உண்டு . உள்ளூர் சட்டம் ஒழுங்கு காவல் அதிகாரியாக எனக்குமுன் இங்கே இருந்தவர் பத்திரிகைக்கு என்று அளித்த ஒரு பேட்டியில் இருந்த வார்த்தைக் குழப்படியை விமரிக்கிறதாய் நான் பேசப் போய் , அதற்காகத் தயாரித்து வைத்திருந்த என் உரையை வீட்டிலேயே விட்டுவிட்டுப் போய்விட்டேன் . அவரைவிட குழப்படியாக அவர்சொல்லாததை யெல்லாம் அவர் சொன்னாப்போல நான் எனக்கே பிடிக்காத அளவில் பேசிவிட்டேன் . இதற்கெல்லாம் நான் புதியவன் . சட்டக் கல்லூரியில் இருந்து இப்பத்தான் வெளியே வந்திருக்கிறேன் , சில மாதங்களே