Posts

Showing posts from July, 2018
Image
நன்றி - ‘காணி நிலம்’ -  (பெயல் – நாவல். ஆசிரியர் சைலபதி. பக். 190 விலை ரூ. 180/- வெளியீடு யாவரும் பதிப்பகம்.)   நில் எனப்  பெய்யும் மழை 2004 திசம்பர் வாக்கில் சுனாமி சென்னையைத் தாக்கியது. அதற்கு அடுத்த பெரு நிகழ்வாக 2015 திசம்பரில் சென்னை கண்ட பெருமழையும் அதைத் தொடர்ந்த வெள்ளப்பெருக்கும். பிறகு 2016 ல் அதுவும் திசம்பர் மாதம்தான், சென்னையைத் தாக்கியது வார்தா புயல். இவற்றைப் பற்றியெல்லாம் போதுமான அளவில் படைப்புகள் எழும்பி வரவில்லை என்பது ஆதங்கமான விஷயம் தான். அரசியல் ரீதியான பெரும் சட்டாம்பிள்ளைத் தனங்களில் தமிழ் சிக்கி, அடங்கிக் கிடக்கிறது. ஆனால் ஆவணங்களுக்கு நடுவே, புனைவுகள் தான் அந்த அவலங்களை மேலும் காத்திரமாக, உக்கிரமாக பிற்கால சந்ததிக்கு எடுத்துரைக்க வல்லவை. சைலபதி 2015 சென்னைமழை பற்றிய தன் அவதானிப்பை மனசிலேயே விளைவித்து நாவல் என அறுவடையாக்கி யிருக்கிறார். ‘பெயல்’ என்கிற அவரது சமீபத்திய நாவல் அந்த நிகழ்வைச் சுற்றியும் நேராகவும் தொட்டுப் படர்ந்து பரவுகிறது. நேரடிப் பாத்திரங்களே அவருக்கு இதில் உதவிகள் அதிக அளவில் செய்திருக்கின்றன. பெருமழை பற்றி முன்பே தன