Posts

Showing posts from October, 2017
Image
எதற்காக எழுதுகிறேன்? எம்.ஜி.சுரேஷ் * நீ ங்கள் என்னிடம் உங்கள் சுட்டு விரல் உயர்த்திக் கேட்கிறீர்கள்: ‘நீ எதற்காக எழுதுகிறாய்?’ இதற்கு நான் என்ன பதில் சொல்ல முடியும்? ‘நான் ஏன் எழுதுகிறேன் என்றால், அப்படிச் செய்யாமல் இருக்க என்னால் முடியவில்லை’ என்று சமத்காரமாகப் பேச நான் விரும்பவில்லை. அதே போல், ‘எனது வாழ்க்கை சொற்களால் ஆனது; ஒன்று நான் வாசித்த சொற்கள், இரண்டு நான் எழுதிய சொற்கள்’ என்று சார்த்தர் சொன்னது போல் கம்பீரமாகவும் என்னால் சொல்ல முடியாது. ஏனெனில், சார்த்தர் அளவுக்கு நான எழுதிக் குவிக்கவும் இல்ல, அவரைப்போல் படித்து முடிக்கவும் இல்லை. ‘வாழ்க்கையால் பாதிக்கப்பட்ட இளைஞன் பதிலுக்கு வாழ்க்கையை பாதிக்க எடுத்துக்கொள்ளும் முயற்சியே இலக்கியம். எனவே, என்னை பாதித்த வாழ்க்கையை, பதிலுக்குப் பாதிக்க நான் எடுத்துக் கொள்ளும் முயற்சியே எனது இலக்கியம்’ என்று நான் வசனம் பேசி வாதிட மாட்டேன். ஏனெனில், நான் எழுத்தாளன் மட்டுமே. புரட்சிக்காரன் அல்ல. சரி, நான் என்னதான் சொல்லட்டும். எனக்கு இப்படிச் சொல்லத் தோன்றுகிறது. எதற்காக எழுதுகிறேன் என்பதற்கு முன்னதாக, நான் எப்படி எழுத வந்தேன் என்
Image
18 09 2014 அன்னம் விருது பெறும் எம்.ஜி. சுரேஷ் எஸ். சங்கரநாராயணன் (இலக்கிய வீதியால் படிக்கப்பட்ட தகுதியுரை) எம்.ஜி. சுரேஷின் நாவல்கள் நூதனமான புனைவுகளின் வழியே மனித இருப்பு குறித்த ஆழமான விசாரணையைக் கோருகின்றன. ‘சோதனை முயற்சி நாவல்‘ என்றாலே வாசிக்கச் சிக்கலானது என்ற பிம்பத்தைத் தன் இயல்பான கதை கூறு திறத்தால் சரித்தவர் எம்.ஜி. சுரேஷ். வரலாற்றுக்குள் புனைவையும், புதிய தொன்மங்களையும், தொன்மத்துக்குள் சமகால அரசியலையும் வண்ணப் பொலிவுடன் மிளிரவைத்தவர் இவர். பின் நவீனத்துவம் என்ற எதிர் கோட்பாட்டை தனது எளிமையான உரையாடலின் மூலம் தெளிவான புரிதலுக்கு வழிவகுத்தவர் சுரேஷ்.  இவரது எழுத்தை மத்திம எழுத்து என்று வகைப்படுத்தலாம். தீவிர எழுத்தைப் போல் மூச்சுத் திணற வைக்காத, அதேசமயம், வணிக எழுத்தைப் போல் வீரியம் நீர்த்துப் போகாத எழுத்து இவருடையது. எழுத்தின் பயன் வாசிக்க சுவாரஸ்யமானதாகவும், கடைசிவரை வாசகனைக் கூட்டிச் செல்கிறதாகவும் இருக்க வேண்டும், கடைசி வாசகனையும் அது சென்றடைய வேண்டும், என்பது இவரது கோட்பாடு. 1971ஆம் ஆண்டு இவரது முதல் எழுத்து தீபம் இதழில் பிரசுரமானது. அதுமுதல் தொடர்ந்து