
முதல்செருகல் இடைச்செருகல் கடைச்செருகல் * ம. ந. ராமசாமி ஒ ரு வேடன், காட்டில் விலங்குகளை, பறவைகளைத் தேடி அலைகிறான். ஒரு மரக்கிளையில் இரண்டு கிரௌஞ்ச பட்சிகள் கொஞ்சி விளையாடிக் கொண்டு இருந்தன. ஆண், பெண் பறவைகள். வேடன் அப்பறவைகளைப் பார்த்தான். சட்டென்று அம்பு ஒன்றை எடுத்து, வில்லில் பூட்டி எய்தான். ஆண் பறவை அடிபட்டு விழுந்தது. பெண் பறவை கதறியபடித் தன் இணையைச் சுற்றிச் சுற்றி வந்தது. அப்போது அங்கு நாரத முனிவர் வருகிறார். வேடனிடம் அவர், “ஆண் பறவையைக் கொன்றுவிட்டாயே, இது மகாப் பாவம் அல்லவா?” எனக் கூறுகிறார். “இதுதான் என் பிழைப்பு. நானும் என் குடும்பத்தினரும் உண்ண இதுபோன்ற செயலில் ஈடுபட வேண்டியிருக்கிறது” என்றான் வேடன். “அப்படியா?” என்றார் நாரதர். “இப்படிக் கொல்வது பாவம். இந்தப் பாவம் உன்னை மட்டும் சேராது. உன் குடும்பத்தினரையும் பாதிக்கும்.” என்று கூறீய நாரதர், “ஒன்று செய். உன் குடும்ப உறுப்பினர்களிடம் செல். சென்று “விலங்குகளையும் பறவைகளையும் கொன்று உங்களுக்கு உணவு அளிக்கிறேன். இச்செயல் பாவம். அப்பாவம் என்னைச் சேரும் என்கின்றனர். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” எனக...