Posts

Showing posts from August, 2022
Image
  நன்றி பேசும் புதிய சக்தி • ஆகஸ்டு 2022 நிசப்த ரீங்காரம் / சிந்தனைத் தொடர் – பகுதி 10   அதிரடி சரவெடி ஞானவள்ளல்   இ ரட்டைப் புலவர் பாடல் ஒன்றை சில பகுதிகளுக்கு முன் எடுத்துக் காட்டினேன். என்னதான் காலடி பூமி சரிந்தாலும் சமாளிப்பதும் துவளாமல் கடந்து போகிறதும் நம்மாட்களின் இயல்புதான். இரட்டைப் புலவரில் ஒருவர் கண் பார்வை அற்றவர். அவரது ஆடை நீரில் அமிழ்ந்து காணாமல் போகிறது. அதை அடுத்த புலவர் சொல்கிறார். வேஷ்டி காணாமல் போகிற பெரிய இழப்பைச் சமாளித்துக் கொண்டு. என்னடா பொல்லாத வாழ்க்கை, என்கிற அலட்சிய பாவனை கொண்டாடியபடி, அந்த மனுசர் பாட்டில் பதில் சொல்கிறார். “இக்கலிங்கம் போனால் என், ஏகலிங்க மாமதுரைச் சொக்கலிங்கம் உண்டே துணை.” (கலிங்கம் – ஆடை.) உதை வாங்கிய வடிவேலு “வலிக்கலயே?” என நடிப்பது போல இருக்கிறது கதை. வெட்டி சவடால் விடுவதில் இப்படி நிறையப் பேர் இருக்கிறார்கள். இந்த பாணியில் கிராமத்துத் திண்ணை உரையாடல்கள் ரொம்பப் பிரசித்தம். “ஏண்டா அமெரிக்கா போனியே. அதிபரைப் பார்த்துப் பேசினியா?” “இல்லை.” “ஏன்?” “அவரு போனவாட்டி இந்தியா வந்தப்ப, என்னை வந்து பாத்தாரா என்ன? அதன
Image
  விகல்பம் எஸ்.சங்கரநாராயணன் * ஒரு குடும்பத்தில் பெண் என்பவளுக்கு சர்வ சகஜமாக அஜென்டாவில் இல்லாத புது பொறுப்புகள் அமைந்து விடுகின்றன. மாமியாருடன் அவளுக்கு இருந்த உறவைப் பற்றியும், நாத்தனார் மச்சினர்களிடம் அவளுக்கான புரிதல் பற்றியும் அவள் ஜாக்கிரதையாகப் பேச வேண்டும். யாரையும் யாரிடமும் விட்டுக் கொடுத்துவிட முடியாது. காட்டிக் கொடுத்துவிட முடியாது. தற்காத்து தற்கொண்டாற் பேணி… வள்ளுவர் அசத்துகிறார். * ஆ ண்களை விட பெண்கள் சூட்சுமமானவர்கள். உள் விழிப்பு அதிகம் கொண்டவர்கள். வயதுக்கு வந்த ஆணின் விளையாட்டுகள், குறும்புகளை விட, பூப்படைந்த பெண்ணின் சூட்சும விழிப்பு அபாரமானது. வயது ஏற ஏற பெண்களின் இந்த உள் கவனம் அதிகமாகத்தான் ஆகிறது. பெண்மையின் இயல்பே அதுதான். வித்யாவதிக்கு மகனின் நடவடிக்கைகளில் திடீரென்று ஒரு வித்தியாசம் தெரிந்தது. அந்தக் கணம் உள்ளே தூக்கிவாரிப் போட்டது. இதை எத்தனை நாளாய் நான் கவனிக்காமல் விட்டேன், என்று சிறு படபடப்பு வந்தது. அவனைச் சின்னப் பையனாகத்தான் நினைத்திருந்தாள். என் வயிற்றில் பிறந்து என் மடியில் வளர்ந்த பிள்ளை. இப்போது எட்டாம் வகுப்பு முடித்து ஒன்பது போகிறான்