Posts

Showing posts from March, 2021
Image
  கு று ந் தொ ட ர்   பறவைப்பாதம் எஸ்.சங்கரநாராயணன் இறுதிப் பகுதி • சி ற்றமைதி நிலவும் மருத்துவ வளாகம். எல்லாரும் பைநிறைய சில்லறை போல கனமான சொற்களுடன் ஆனால் மௌனமாக நடமாடுகிறார்கள். ஐசியூ என வழி கேட்கவே மனம் படபடத்தது. வியர்வை முத்துக்கள் குளித்தன. ரத்தத்தில் குளிர். படபடப்பாய் உணர்ந்தார். அட ஆம்பளையே. நீ அவளுக்கு தைரியம் சொல்ல வேண்டாமா? முடியுமா? பெண்களை ஆண்கள் அடக்கி யாள்கிறதான பாவனை எல்லாம் சும்மா. துயர கணங்களில் பெண்களே ஆண்ளை வழி நடத்துகிறார்கள். அவர் பின்சீட்டில், வாகனத்தில் அமர்கிற மனைவி. ஆனால் அலுவலகத்து நெருக்கடி, அல்லது எதிர்பாராமல் திகைத்துப் போகிற தருணங்களில், அவர் அவள் மடிக்குழந்தை. துக்கம் பெண்களுக்குப் புதிது அல்ல என்பது போல, அக்கணங்ளில் அவர்கள் பலங்கொண்டு விஸ்வரூபம் எடுக்கிறார்கள். புடம் போட்டாற் போல பொலிகிறார்கள். கவனித்துப் பார்த்தால், கணவன் இல்லாமல் இவர்கள் சமாளித்துக் கொள்கிறதாகத் தான் தெரிகிறது. தங்களையும் கவனித்துக் கொண்டு பிள்ளைகளையும் வளர்த்து ஆளாக்கிக் காட்டுகிறார்கள் பெண்கள்... என ஆயிரம் பேரை உதாரணம் காட்ட முடிகிறது. ஆனால் மனைவியை நேசிக்கிற கணவர
Image
  சத்தியப்பிரியனின் ‘காற்றின் திசை’ சிறுகதைத் தொகுதிக்கு அளித்த முன்னுரை   அட்சதைத் தூறல் எஸ்.சங்கரநாராயணன்  ** சத்தியப்பிரியனின் இந்தச் சிறுகதைக் கொத்து நூலுக்குத் தோரணம் கட்டி வாழ்த்தி உங்களை வரவேற்பது என் பணி. சத்தியப்பிரியன் நமது சமூகத்தின் மத்தியதரக் குடும்பங்களின் சாட்சியான பாத்திரங்களை அழுந்தப் பதிக்கிறார். அவர்கள் ஒருவர்மேல் ஒருவர் பிரியமும் வெறுப்பும் ஒருசேரக் கொண்டவர்களாக அமைகிறார்கள். கதாபாத்திரங்களுடன் இன்னொரு மறைமுகப் பாத்திரமாக விதி அமைகிறது. அதன் இரு பரிமாணங்களாக குடும்பத்திற்குள்ளேயே தியாகமும் சுயநலமும் வேறு வேறு பாத்திரங்களில் அடையாளப் படுகிறது. அவர்கள் வாழ்க்கைசார்ந்த முணுமுணுப்புடன் எல்லாவற்றையும் சகித்துப் போகிறார்கள். வேறு வழி இல்லை எனத் தெளிந்தவர்களாய் அவர்கள் இருக்கிறார்கள். எதிர்பாராத அதிர்ச்சிகள் பற்றிய எதிர்பார்ப்பும் பயமும் அவர்களுக்கு இருக்கிறது. சம்பவங்களின் நீர்ச்சுழிப்பில் தப்பிப் பிழைப்பது அதிர்ஷ்டம் சார்ந்த விஷயம். மொழி இறுக்கமான கதைகளை எழுத சத்தியப்பிரியன் அவாவுறுகிறார் சில முன்மாதிரி எழுத்தாளர்களின் அடையாளங்களுடன். அது ஒரு சமூகத்தின் எழுத்து எ