Posts

Showing posts from October, 2019
Image
முற்றுப்பெறாத ஓவியம் எஸ்.சங்கரநாராயணன்  * ச ரவணனுக்கு பெங்களூருவில் வேலை கிடைத்தது. இது எதிர்பாராதது அல்ல. ஐ. ட்டி துறை என்றாலே, அதுவும் நல்ல சம்பளத்தில் வேலை என்று அமர பெங்களூரு அல்லது ஹைதராபாத் என்றுதான் இந்தியாவில் நிலைமை. இந்த நாளை அம்மா எதிர்பார்த்திருந்தாள். அவன்அப்பாவின் கடைசிச் சம்பளத்தை விட அவனது முதல் சம்பளம் அதிகம். இதுவும் அம்மா எதிர்பாராதது அல்ல. இன்ட்டர்வியூ என்று கல்லூரிக்கே வந்து ஆளெடுத்தார்கள். நான்காம் ஆண்டு கடைசி செமிஸ்டர். முதலில் நுழைவுத் தேர்வு. மதியத்துக்கு மேல் நேர்முகத் தேர்வு. அலுவலகத்தில் இருந்து உணவு இடைவேளையில் அம்மா பேசினாள். காலையில் எப்படிப் பண்ணினே? ஆன்லைன் டெஸ்ட். தேறி யிருந்தான். மதியம் நேர்முகத் தேர்வு. 120 பேர் எழுதியதில் பத்துப் பேருக்கு தான் நேர்முகத் தேர்வுக்கு வந்தது. “அதெல்லாம் நீ ஜெயிச்சுருவேடா...” “அதெப்பிடிம்மா?” “ஏன்னா, நீ என் பிள்ளை. என்னைமாதிரி... புத்திசாலி,” என்றாள். அவன் ஜெயிப்பது அவளுக்கு, தானே ஜெயிக்கிற மாதிரி, என்று தோன்றியது. “சாப்பிட்டியாடா?” என்று அடுத்த கேள்வி... மகன்கள் உலகெங்கிலும் ஒரே மாதிரி அமைவது இல்லை.
Image
நான் பார்த்த திரைப்படம் அ சு ர ன் சி ல தத்துவங்களைக் காதில் வாங்கிக் கொண்டு அதில் அமிழாமல் “பரவால்லியே... இதைவெச்சி போணி பண்ணலாம்” என்கிற தமிழ்ப் படங்களில் இதுவும் ஒன்று. 01. முதல் பாதி கதை காட்டில் அப்பாவின் மகனின் பயணம் என்று ஓரளவு இயற்கைச் சூழல் சார்ந்து, பூமணி தன் நாவலில் பிரியப்பட்டுக் காட்டியபடி நகர்கிறது. ஆனால் அது திரைப்படத்தின் காடு, அடர்ந்த காடு அல்ல... மண் தரை. அதில் அவர்கள் எப்படி ஒளிந்து கொண்டார்கள் தெரியவில்லை. உயரத்தில் இருந்து வில்லன் தேடினாலும் அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சினிமாக்களில் வில்லன் சுட்டால் குறி தவறும். ஆனால் கணவனை இழந்த பெண் வில்லனை ஒரே தோட்டாவில் தவறாமல் சுட்டுவீழ்த்தி படத்தை முடிப்பாள்... அதுபோல தனுஷோ அவனது உறவினர்களோ சுலபமாக அதே காட்டில் சந்தித்துக் கொள்கிறார்கள். வில்லனுக்கு மாத்திரம் அந்த வாய்ப்பு வரவில்லை. நாய்களுடன் வில்லனின் வேட்டை. ஆனால் சிதம்பரம் - தனுஷின் பிள்ளை - அவனது ஆசை வளர்ப்பு நாய் சரியாக இவனிடம் அடையாளம் கண்டு வந்து சேர்ந்து விடுகிறது. 02. இடைவேளைக்குப் பிறகு பஞ்சமி நில ஆக்கிரமிப்பு - கீழ் சாதிக்காரன் செருப்பு போட