Posts

Showing posts from September, 2016
Image
CHINESE STORY முதல் வேலை முதல் அதிகாரி மா ஃபெங் (சீனா) தமிழில் எஸ்.  ச ங்கரநாராயணன் போ ன கோடையில் மாநில நீர்சேமிப்பு பயிற்சிப்பள்ளியில் படிப்பு முடித்தஜோரில் இங்கே வந்து சேர்ந்தேன். ஜிவுஜிவுவென்றிருந்தது, புதிதாய் வேலைக்குப் போகிற பயமா ஆர்வக்கோளாறா தெரியவில்லை. முதல் வேலைன்னா எல்லாப் பிள்ளைங்களுக்கும் இப்டிதான் இருக்கும் போல! சைக்கிள் சவாரி. பின்ஸ்டாண்டில் பெட்டிபடுக்கை. பஸ் வேணாம் என்றிருந்தது, வேலைன்னு ஆயிட்டால் ரொம்ப தூரம் சுத்தறாப்ல இருக்குமே, பட்டிக்காடுன்னா பஸ்சாவது ஒண்ணாவது, நடராஜா சர்வீஸ், இல்லன்னா, சைக்கிள். உடம்புல தெம்பு வேணும். பழகிக்கணும். விடியுமுன் கிளம்பியது, போய்ச்சேர உச்சி, ஊருக்குள்ள நுழைஞ்ச ஜோரில் - டமால்! ஊரே சந்துபொந்தா கோமணமாக் கெடந்தது, ஒரு கிழவன். காத்துப்போன பந்தாட்டம் கோணாமாணா, நெளிசல் நடை. வெயில் மண்டையப் பொளக்குது, இவனானா முழுக்க மூடிய மேல்கோட்டு, விளையாட்டுக்கான கால்சராய், நாடாமுடிச்சு. தலையில் பெரீய்ய வைக்கோல் தொப்பி. ஏய் ஐயா, வெயிலை மறைக்கறியா, குளிருக்கு மூடிக்கறியா? குனிஞ்ச தலை, கூன் முதுகு, கையப் பின்னால கட்டிக்கிட்டிருந்