Posts

Showing posts from March, 2020
Image
உலகச் சிறுகதை / ஹங்கேரி நன்றி ‘நால்வர்’ சிற்றிதழ் பொய் இஸ்ட்வன் ஆர்கேனி / ஹங்கேரி இ ந்தக் கதை உண்மையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் நடந்திறாத கதைகள், அவையும் நம் கவனத்துக்குரியவை.   ஏனெனில் அவை அந்தமாதிரி, நமக்கு ஊக்கமளிக்கும் வகையில் சொல்லப் படுகின்றன. ஒரு ஐந்து வருடம் முன்னால் யாராவது இந்தக் கதையைச் சொல்லியிருந்தால் இந்த மாதிரிதான் சொல்லி யிருப்பார்கள். காலில் செருப்பு இல்லாமல் கந்தலாடையுடன் வயசாளி ஒருவன் பலதன் ஊரில் இருந்து வரும் சாலையில் நடந்து போய்க் கொண்டிருக்கிறான். சிறிது போனதும் அவன் கையசைக்கிறான். அந்த வழியே ஒரு பெரிய சரக்கு வாகனம் வருகிறதைப் பார்த்துவிட்டு தான் கையசைக்கிறான் அவன். சரக்கு வாகனம் நிற்கிறது. வாகன ஓ ட்டி கதவைத் திறக்கிறான். “எதுக்குக் கைகாட்டினீங்க தோழர்?” அவன் கேட்கிறான். “எதுவரைக்கும் போறீங்க?” வயசாளி கேட்கிறான். “புதாபெஸ்ட் வரைக்கும்... தோழர்.” “என்னியும் தயவுசெஞ்சி உங்ககூடச் சேர்த்துக்குவீங்களா?” என்று கேட்கிறான் வயசாளி. “வண்டில இடம் இல்லையே, தோழர்...” என்கிறான் வாகன ஓட்டி. கதவை அடித்துச் சாத்திக் கொள்கிறான். வண்டியைக் கிளப்புகிறான்.