Posts

Showing posts from October, 2021
Image
  பொன்கூரை வேய்ந்த வானம் எஸ்.சங்கரநாராயணன் ***   அ ப்பா அலுவலகத்தில் இருந்து வந்து விட்டார். சந்திரசேகரன். மணி ஏழரை தாண்டி விட்டது. வெளியே போன பத்மராஜன் இன்னும் வீடு திரும்பவில்லை. அப்பா வந்தவுடன் அவனைத்தான் கேட்பார். பெற்றவளுக்குக் கவலையாய் இருந்தது. பிள்ளைக்கு ரெண்டுங் கெட்டான் வயது. பெற்றவர்கள் கொஞ்சம் விட்டுக் கொடுத்துதான் போக வேண்டும். காலம் அப்படி. அத்தோடு, இந்தக்காலப் பிள்ளைகளுக்கு நம்மைவிட வெளி உலகம் தெரிகிறது… என நினைத்தாள் அவள். மைதிலி. அம்மா. பையனைப் பற்றி அத்தனை கோபிக்கிறார் இவர். “எல்லாம் நீ கொடுக்கிற இடம்…” என்பதாகக் கத்துகிறார். இவருக்கு ஏன் இத்தனை கோபம் வருகிறது தெரியவில்லை. அது தன் வார்த்தை மதிக்கப் படவில்லை என்கிற ஆத்திரம். எங்கே போகிறான், என்று அவனும் சொல்லிவிட்டுப் போகலாம். என்றாலும் தோளுக்கு வளர்ந்த பிள்ளை வெளியே இறங்கும்போது விசாரணை தொனியில், எங்க போறே? எப்ப வருவே… என்றெல்லாம் கேட்பது பாந்தமாய் இல்லை. இவனும் சற்று அப்பாசொல் கேட்கலாம். அல்லது கேட்பதாக சிறிது பாசாங்காவது செய்யலாம். அவனும் கண் சிவக்க பதில் பேசுகிறவனாய் இருந்தான். அவளுக்கு அவனை ஆதரித்துப் பேசுவத
Image
  நன்றி அக்டோபர் 2021 ஆவநாழி இணைய இருமாதஇதழ்   கற்றல் கற்பித்தல் எஸ்.சங்கரநாராயணன்   கா லை விடியல்ரேகையோடு வந்து சேர்ந்துவிட்டான் மணிகண்டன். வாசலில் இருந்தே “குஞ்சுக் குட்டி?” என்று குரல் கொடுத்தான். குழந்தையைத் தேடித்தான் இவ்வளவு ஓடி வந்திருக்கிறான், என்று புன்னகைத்தபடியே சித்ரா வந்து கதவைத் திறந்தாள். “தூங்குது…” என்றாள் அவன் முகத்தைப் பார்த்து. உள்ளே வந்து பையை வைத்தவன் படுக்கையறைக்குப் போனான். பரபரவென்று மின்விசிறி ஓடும் சத்தம். காலண்டர் ஒன்று குளத்துக்கு வந்த புதுத்தண்ணி போல சளப் சளப்பென்று விம்மி வீங்கி எகிறிக் கொண்டிருந்தது. நாலு பக்கமும் தலையணை அணை கட்டி நடுவே குழந்தை தூங்கிக் கொண்டிருக்கிறது. ஷ், என்று உதட்டில் விரல் வைத்து சித்ரா எச்சரிக்கிறாள்.  “எச்சரிக்கை. ஆட்கள் வேலை செய்கிறார்கள்” என்று சாலைகளில் பலகை பார்த்திருக்கிறான். இது, தூங்குவதற்கு இத்தனை பாதுகாப்பா? அவளைக் கேட்க முடியாது. “ராத்திரி பூரா ஒரே கொட்டம். என் தூக்கம் போச்சு. இனி எழுந்துட்டா இருக்கு அடுத்த குருஷேத்திரம்” என்றாள் சித்ரா. இரண்டு அல்லது மூன்று வாரத்துக்கு ஒருமுறைதான் வீட்டுக்கு வர முடிகிறது. அலுவலகத்