Posts

Showing posts from February, 2016
Image
இதழ் - சூர்யக்கதிர் / இலக்கியம் / மதுமிதா பேட்டி பதில்கள் எஸ். சங்கரநாராயணன் • மொழிபெயர்ப்பாளனுக்குக் குறிக்கோள் வேண்டும் எண்பதுகளின் தமிழ் இலக்கியவாதியாக அடையாளப்படும் எஸ். சங்கரநாராயணன்  கதை கவிதை குறுநாவல் நாவல் கட்டுரை மொழிபெயர்ப்பு என்று பல்துறைகளில்  கால் பதித்தவர். உலகச் சிறுகதைகள் மூன்று தொகுதிகள் உட்பட ஏறத்தாழ  80 நூல்களின் ஆசிரியர். நிஜம் என்கிற சிற்றிதழ் நடந்தியவர். தற்போது ஆண்டுதோறும்  இருவாட்சி பொங்கல் மலர் கொண்டு வருகிறார். கச்சிதமான உவமை வீச்சுடனான  கவிதை நடை இவரது முத்திரை. சொல்லாடல்களில் புன்னகை வரவழைக்கக் கூடிய  நகைச்சுவை மிளிரும். மொழிபெயர்ப்பு குறித்து இவரது  கருத்துக்கள் கவனங் கொள்ளத் தக்கவை. மொழியாக்கம் என்று வரும்போது Translation, Transliteration, Transcreation என்ற வகைகளாக உள்ளனவே. இவை அனைத்தும் ஒன்று இல்லையா. வேறு வேறு definition கோட்பாடுகளா? இந்த டிரான்ஸ்லேஷன் பாணி என்பது அந்தக்கால மேஜர் சுந்தரராஜன் பாணி. What can I do for you? நான் உனக்கு என்ன செய்யணும்? – என அவர்தான் திரைப்படத்தில் வசனம் பேசுவார். டிர