
கி ரு ட் டி ன ம் மா எஸ். சங்கரநாராயணன் கி ருட்டினம்மாவை மறக்க முடியுமா ? எங்கள் வீட்டில் பத்துபாத்திரம் தேய்க்க என்று வந்து போனாள் கிருட்டினம்மா . ஒருநேரம் சும்மாவிருக்க முடியாது அவளால் . சதா எதாவது செய்துகொண்டிருக்கப் பிரியம் கொண்டவள் . என் தாய்க்கு அந்த விவரம் தெரியும் . அவள் தினசரி வேலைக்கு என்று வருகிறது அந்தக் காலை ஆறரை மணி . சற்று வேகவேகமான நடை . அந்த ஆறரை மணிக்கு எதற்கு இந்த வேகம் ? அவள் நடையே அப்படி . குணமே அப்படி , என்று பிறகு தெரிந்து கொண்டோம் . அவள் மனசில் இயங்கிக் கொண்டிருந்தது கடிகாரம் . அவள் வரும் நேரம் அம்மா அறிவாள் . அவளுக்கு ஒத்தாசையாக பத்துபாத்திரங்களை முற்றத்தில் கொண்டு போட்டிருக்கலாம் அம்மா . செய்திருக்க மாட்டாள் . கிருட்டினம்மா வந்து நிற்பாள் . '' இன்னும் பாத்திரம் போடலியாம்மா .... எனக்கு நேராவுதும்மா '' என்பாள் பொறுமையில்லாமல் . '' கொஞ்சம் இரு கிருட்டினம்மா . கைவேலையா இருக்கேன்ல ...'' கிருட்டினம்மா காத்திருக்க மாட்டாள் . அவளே பா...