short story - japan

வங்க வேங்கையின் கடைசி கணங்கள் யோகோ ஒகாவா (ஜப்பான்) * * * தமிழில் எஸ். சங்கரநாராயணன் பு றவழிச் சாலையை விட்டு நதியோரமாய் தெற்காக... பாலத்தைத் தாண்டுகையில் சின்னதாய்த் தயக்கம். திரும்பி... ஊருக்குள்ளே நுழைந்திருந்தேனானால்... ஒரு சில நிமிடங்களில்... 'அவளது' அடுக்ககத்தில் இருந்திருக்கலாம். மகா புழுக்கமான மதியம். காற்றே இல்லை. சாலையோர மரங்களெல்லாம் விதிர்விதிர்த்து நின்றன. கொதிக்கும் கல்த்தரையின் அனல் கானல். எதிர்ப்பக்கமிருந்து வரும் கார்களின் மீது பட்டுத் தெறித்து வரும் சூரியன் கண்ணைக் குருடாக்கியது. காரின் குளிர்சாதனத்தை முழுசாய் முடுக்கியும் ஜன்னல்வழியே பீரிட்டுப் பாயும் சூட்டை வேட்டை ஆட இயலவில்லை. கார் ஸ்டீயரிங்கே கொதித்தது. கைகள் கொதித்தன. வீட்டில் இருந்து கிளம்பியதிலிருந்தே எனக்குள் பைத்தாரக் கணக்குகள். அடுத்த நிறுத்தத்தில் சிவப்பு கிடைத்தால் யூ டேர்ன் அடி. வீடு திரும்பு. எதிரே வெள்ளி வண்ணத்தில் பந்தயக் கார் வருகிறதா, பயணத்தைத் தொடர். வளர்ப்புப் பிராணிகள் கடையில் நேற்று பார்த்தேனே, டெரியர் நாய்க்குட்டி, போகை...