WINNER OF NOBEL PRIZE FOR LITERATURE 1998

(போர்த்துக்கீசிய நாவல்) பார்வை தொலைத்தவர்கள் யோசே சரமாகோ தமிழில் எஸ். சங்கரநாராயணன் நாவலின் ஒரு பகுதி பொ ழுது விடிந்தது. சின்ன ஊதுபத்தி நீட்டல்கள் போல அந்தக் கரிப்பாடுகளில் இருந்து புகை. அதுவும் ரொம்ப நீடிக்கவில்லை. மழை வந்துவிட்டது இப்போது. தூறல் தூவல்கள். பனிச் சிதறல்தான். ஆனால் தொடர்ந்து பெய்தது. சாரல் மழை. முதலில் அதனால் பூமியைக் கூட நனைக்க முடியவில்லை. அது பூமியை எட்டுமுன்பே ஆவியாய் மேலே கிளம்பியவாறிருந்தது. ஆனால் மழை தொடர்ந்தது. எல்லாருக்கும் தெரியும். மென்மையான நீரேயானாலும் கடினமான கல்லையே கரைக்க வல்லது அது. வேறு யாராவது இதை எதுகை மோனையாய்க் கவிதை எடுத்து விடலாம்.* (*ஆணைக் கரைக்கும் பெண்ணின் கண்ணீர் போல - எஸ். ச.) அந்த அகதிகளின் கண் மாத்திரம் குருடாகி விடவில்லை. அவர்கள் நினைவே ஒருமாதிரி கலங்கலாய்த் தான் காணுகிறது. அட சனி கிரகமே இந்த மழையில் சாப்பாடு எப்படி வரும்?... என அவர்கள் அங்கலாய்த்து அரற்றினார்கள். நீங்களா என்னமாச்சிம் குண்டமண்டக்க யோசிச்சி மண்டைய உடைச்சிக்க வேணாம், என அவர்களை யார் சமாதானப் படுத்துவது? அட காலை உணவுக்கு இன்னும...