நேற்றைய அலைகளின் ஈரம் (தொட்ட அலை தொடாத அலை நாவலின் இரண்டாம் பதிப்பின் முன்னீடு) பிப்ரவரி 25 முதல் 29, 2016 வரை நாங்கள், சுமார் 60 தமிழ் எழுத்தாளர்கள் கோலாகலமாய் கோலாலம்பூரில் இருந்தோம். மலேஷிய அரசின் ‘இந்திய விவகாரங்களுக்கான சிறப்பு அமலாக்கப் பிரிவு, பிரமதர் துறை’ (SITF) ஏற்பாடு செய்த அளவில், கோலாலம்பூர் மாநகர மன்றமும், ‘நாம்’ அமைப்புமாக எங்கள் அறுபது நூல்களை வெளியிட்டு கௌரவித்தார்கள். கலைஞன் பதிப்பகம் இந்த நூல்களைப் பதிப்பித்தது. கலைஞன் பதிப்பகம் திரு நந்தா அத்தனை நூல்களையும் விரைவாக புத்தக வடிவில் கொணர்ந்தது இன்னொரு வியத்தகு சாதனை. அரசு விருந்தினர் கௌரவம் அதுவும் வேறொரு நாட்டில் யாருக்கு வாய்க்கும்? அதிலும் ஒரு எழுத்தாளனுக்கு, அவன் எழுத்துக்காக வாய்ப்பது என்பது அரிதினும் அரிது. பெரிதினும் பெரிது. ஒரு மாலை நிகழ்வாக மலையக மக்களின் பாரம்பரிய நடனம் உட்பட நாங்கள் சிறப்பாக உபசரிக்கப் பட்டோம். எங்கள் புத்தகங்களை அரசின் துணையமைச்சர் இளைஞர் விளையாட்டுத்துறை, மாண்புமிகு டாக்டர் டத்தோ எம். சரவணன் (படம் 1) அவர்கள் வெளியிடடார்கள். பரஸ்பர அறிமுக உரையாக இணைப் பேராசிரியர் ட...
Posts
Showing posts from June, 2016
- Get link
- X
- Other Apps

--- சொ ல் லி ன் செ ல் வ ன் அன்டன் செகாவ்/ருஷ்யா தமிழில் - எஸ். ச ங்கரநாராயணன் கி ரில் இவனோவிச் பாபிலோனவ் என்கிற கல்லு ¡ ரி உதவிப் பேராசிரியர் நல்லதோர் காலையில் நல்லடக்கம் செய்யப் பட்டார். நமது தேசத்தில் பரவலாக அறியப் பட்டபடி இரு துன்பங்களில் - மோசமான மனைவி மற்றும் போதைப் பழக்கம் - அவர் இறந்து போனார். அவரது இறுதி ஊர்வலம் தேவாலயத்தில் இருந்து கல்லறை நோக்கிக் கிளம்பவும், அவருடன் பணியாற்றும் நண்பரான போப்லாவ்ஸ்கி நண்பன் ஒருவனைத் தேடி வாடகைக் கார் ஒன்றில் தாவியேறிப் போனார். கிரிகோரி பெட்ரோவிச் ஜபோய்க்கின் என்கிற அந்த நண்பன் இளைஞனேயானாலும் புகழ் மிக்கவன். மூர்த்தி சிறிது, கீர்த்தி பெரிது - என்னுடைய வாசகர்கள் அவனை அறிவார்கள் - ஜபோய்க்கின் முன்தாயரிப்பே இல்லாமல் கல்யாணங்களிலும், பெருவிழாமேடைகளிலும், இழவு நிகழ்ச்சிகளிலும் உரையாற்ற வல்லவன். து ¡ க்கமா, காலி வயிறா, மொடாக்குடியா, அட, கடும் காய்ச்சலா... எந்த நிலையிலும் நினைச்சால் அவனால் பேச முடியும். சீராகவும் மென்மையாகவும் வார்த்தைகள், ஏராளமான வார்த்தைகள்...
- Get link
- X
- Other Apps

ப ரி சு ச் சீ ட் டு அன்டன் செகாவ் - ருஷ்யா தமிழில்/எஸ். சங்கரநாராயணன் ** இவான் டிமிட்ரிச் கிடைக்கிற சம்பளமே யதேஷ்டம் என வாழ்கிற நடுத்தரன். இரவு உணவை முடித்துக் கொண்டு செய்தித்தாளை வாசிக்க சோபாவில் உட்கார்ந்தான். மேஜையை சுத்தம் செய்துகொண்டே பெண்டாட்டி 'இன்னிக்குப் பேப்பரைப் பார்க்கவே விட்டுட்டது' என்றாள். 'குலுக்கல் முடிவு வந்திருக்கா பாருங்க.' 'ஆமா, இருக்கு,' என்றான் டிமிட்ரிச். 'ஆனா உன் சீட்டு காலாவதியாவல்லியா?' 'இல்லல்ல, வட்டியெடுக்க நான் செவ்வாயன்னிக்குதானே போயிருந்தேன்...' 'நம்பர் என்ன?' 'வரிசை 9499 - எண் 26' 'சரி... பாத்திர்லாம். 9499 அப்புறம் 26...' பரிசுக் குலுக்கல் அதிர்ஷ்டத்தில் அவனுக்கு நம்பிக்கை கிடையாது. பொதுவாக குலுக்கல் முடிவுகளை அவன் சட்டை செய்வதும் கிடையாது. ஆனாலும், இப்போது வேறு செய்ய எதுவும் இல்லாததாலும், கையில் பேப்பர் இருக்கிறதாலும், பரிசு பெற்ற எண் வரிசையில் விரலைக் கீழ்நோக்கி ஓட்டினான். அவனது அசிரத்தையைக் கிண்டலடிக்கிற மாதிரி, மேலிருந்து இரண்டாவ...
- Get link
- X
- Other Apps
சிவன்கோவில் கவியரங்கம் எஸ். சங்கரநாராயணன் அ றிவிற் சிறந்த இந்த அவைக்குத் தலை வணங்குகிறேன். இந்தக் கூட்டத்துக்கு என்னைத் தலைமையேற்கும்படி திரு சித்தன் சொன்னபோது எனக்கு ஆச்சர்யமாய் இருந்தது. சித்தம் போக்கு சிவம் போக்கு என்பார்கள். அவர் போக்கே பல சந்தர்ப்பங்களில் ஆச்சர்யமளிப்பதாய் இருக்கிறது. இந்த வேண்டுகோளும் அப்படியே. இதில் ஒரு அன்பர் ஹாங்காங் தமிழ்ச்சங்க செயல்பாடுகள் பற்றிப் பேச வந்திருக்கிறார். நான்கு நூல்கள் வெளியிடப்பட இருக்கின்றன. அதை வெளியிட நால்வர், பெற்றுக்கொள்ள நால்வர். அதைப்பற்றிப் பேச நால்வர், பிறகு நூலாசிரியர் உரை.... என இனி மேடையேறுகிற எல்லாருக்கும் அவரவர் வேலை இருக்கிறது. பொறுப்பு இருக்கிறது. எனில் என் வேலைதான் என்ன? இத்தனை பேரைக் கணக்கு பண்ணி ஆளுக்கு ரெண்டுபேரைக் கூட அழைத்து வந்தால் கூட அரங்கு நிரம்பி விடும் என்று சித்தன் ஒரு கணக்கு வைத்திருக்கலாம்... நானும் சில நபரை வரச் சொல்லியிருந்தேன். அவர்கள் வரவில்லை. அவர்கள் இன்றைக்கு இந்த கே.கே.நகர் பக்கமே வரவில்லை என அறிகிறேன்... ...