
அஞ்சலி - ஞானக்கூத்தன் நிலையின் திரியாது அடங்கியான் எஸ். சங்கரநாராயணன் -- த மிழுக்கு ஞானக்கூத்தனின் பங்களிப்பு பரந்து பட்டது. எனது கல்லூரி நாட்களில், 1980 களில், அவரை அறிமுகம் செய்துகொண்டது சிறு புன்னகை வரவழைக்கிற அவருடைய தெறிப்புகளில் தான். காளமேகப் புலவருக்குப் பின் சட்டென, மாபெரும் இடைவெளியில், இதோ, என மனம் பொங்கிய தருணம் அது. தமிழ் எனக்கு மூச்சு, ஆனால் பிறர் மேல் விட மாட்டேன், என்பார் அவர். அரசியல்வாதிகளிடம் அவருக்கு ஒரு ஆக்ரோஷமான கோபம் இருந்தது. தலைவர்களேங், என்ற அவரது கவிதை மகா பிரசித்தம். பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தினரால் ராமருக்கு செருப்பு மாலை போட்டு ஊர்வலம் நடந்தது. ஞானக்கூத்தன், அதில்வந்த எத்தனை பேர் ராத்திரி தூக்கம் வராமல் புரண்டார்களோ, என எழுதிக் காட்டுவார். சொல்முறையில் அவருக்கு ஒரு கருத்து வீச்சு தெளிவாக இருந்தது. கடவுளையும் அவர் விட்டு வைக்கவில்லை. கவிதை 1 நாயகம் மனிதர் போற்றும் சாமிகளில் ஒற்றைக் கொம்பு கணபதியை எனக்குப் பிடிக்கும். ஏனெனில் வே றெந்த தெய்வம் வணங்கியபின் ஒப்புக் கொள்ளும் நாம் உடைக்க? • கவிதை 2 மஹ்ஹான் காந்தி மஹ்ஹான் ...