
நன்றி பேசும் புதியசக்தி மாத இதழ் அதிகாலைத் தளிர் கிரணம் சூசா செல்யம் (ஹங்கேரி) தமிழில் எஸ். சங்கரநாராயணன் ஒ ரு ரம், ஒரு பீர் தருவித்தேன். அவன்… உள்ளே நுழைந்தான், அப்படியே அந்தரத்தில் கரைந்து விடமாட்டேனா என ஆகிவிட்டது. அட நல்லூழே, இப்ப என்னைப் பார்க்க எப்பிடி இருக்கும். அவனைத் திரும்ப சந்திப்பேன் என்கிற எண்ணத்தையே எப்பவோ நான் விட்டுவிட்டேன். எத்தனையோ வருஷம் முன்னாலேயே அவன் என்னை விட்டுப் பிரிந்து போய்விட்டவன். எத்தனை வருஷம்னு எண்ணக் கொள்ளாது. வருடங்கள், மாதங்கள, நாட்கள் என இப்போது எனக்கு எதுவுமே இல்லாமல் ஆகிப்போனது. என்னிடம் இப்போது நான் என்ற பிரக்ஞையே அற்றுப் போய்விட்டது. பருவகாலங்கள், அதைப் பின்தொடர முடியும்… குறைந்தபட்சம் அதை நான் யூகம் செய்துகொள்ளலாம். இந்தக் கந்தல் உடைகளில் என் உடம்பே தகித்தால் அது கோடை. நடுக்கம் எடுத்தால் குளிர்காலம். எனக்கு வசந்தமும் இலையுதிர்வதும் ஒரே மாதிரி தான். அவன் நல்ல பையன்தான். அவனைப்போல என்னை நேசித்தவர் வேறு யாரும் இல்லை. என்னை நேசித்தவர்கள், எல்லாரும் இறந்து விட்டார்கள். அம்மா, அப்பா, எல்லாருமே. என் சொந்தக்காரர்களில் ஒருத்தர் கூட...