ஓம் சக்தி தீபாவளி மலர் 2023ல் வெளிவந்த கதை. எமர்ஜென்சி கோட்டாவும் வெயிட்டிங் லிஸ்டும் எஸ்.சங்கரநாராயணன் சி ல பெயர்களை வைத்து அந்த நபர் ஆணா பெண்ணா என்று யூகிக்க முடிவது இல்லை. எங்கள் அலுவலகத்தில் கஸ்தூரி என்று ஒருத்தர் வேலை செய்தார், அவரது முழுப்பெயர், கஸ்தூரிராஜன்… என்று நினைக்கிறேன். அதுவே ஞாபகத்தில் இல்லை. எல்லாரும் அவரை கஸ்தூரி சார் என்றே அழைத்துப் பழக்கம். கஸ்தூரி தினசரி அலுவலகத்துக்குக் குடை எடுத்து வருவார். சிறு வெயிலும் அவரை ஆயாசப் படுத்தியது. தளர்ந்த நடை. “இன்னும் ஒரு வருடம். நான் ரிடையர் ஆயிருவேன். அதுவரைக்கும் தாக்கு பிடிக்கணுமே” என்று பேரலுப்புடன் பேசுவார். பார்க்கப் பாவமாய் இருக்கும். சில பேர் துன்பப்பட என்றே பிறக்கிறார்கள் என்று அவரைப் பார்த்தால் தோன்றும் . நிறைய ஆசையும் எதிர்பார்ப்புமாய் அவர் தன் மனைவியைக் கல்யாணம் செய்து கொண்டார். அவர் மனைவி அத்தனை அழகு என்று சொல்ல முடியாது… என்றாலும் அவர் அவளை அத்தனை நேசித்தார். கல்யாணத்துக்குப் பிறகு தன் வாழ்க்கை அபாரமாய் இருக்கும் என அவருக்கு அத்தனை நம்பிக்கை இருந்தது. கனவு இருந்தது. கஸ்தூரியின் மனைவிக்கு கணவன்மேல் ...
Posts
Showing posts from November, 2023