சிறுகதை தா வ ர ங் க ளி ன் த லை வ ன் எஸ் . சங்கரநாராயணன் நாழியாறு ஊரை மாளாக் காதலுடன் இடுப்பைத்தொட்டு வளைத்துக் கடக்கிறது . கரைகளைத் தொட்டாப்போல மரப்பாலம் ஏறிப்போக லிங்கேஸ்வரமூர்த்தி திருக்கோவில் . கடந்தால் வயல்தான் . டிரில்மாஸ்டரின் ஆணைக்குப் போல , சேர்ந்திசைக்குப் போல ஒருசேரத் தலையசைக்கும் நெற்பயிர் . இளம்பச்சை கடும்பச்சை என வளர்ச்சிக்குத் தக்கபடி காற்றை கிரிக்கெட்டில் ஆறு அடித்தாப்போல அனுப்பி வைக்கும் பிரியமாய் . டி . வி . பொட்டியில் இப்பல்லாம் பொழுதன்னிக்கும் கிரிக்கெட்தான் . ராத்திரி பகல் கிடையாதா இவகளுக்கு . விளக்கைப் போட்டுக்கிட்டு விளையாடுகிறார்கள் . தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டு அதைப் பார்க்க பெருங் கும்பல் . ஒரே கொண்டாட்ட கும்மாள அமக்களம் - கோயில் திருவிழா போலிருக்கிறது . விளையாடற ஆளுகளும் தீவாளிக்குப் போல ஆட்டத்துக்கு புதுத்துணி போடுகிறார்கள் ... நம்மல்லாம் வீட்ல நல்ல துணி , விளையாட கிளையாட சுமார்த் துணி போடுவம் . அந்த டிரில் உடற்பயிற்சியும் பார்த்திருக்கிறார...