(1998ன் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற நாவல்) cover illustration JEEVA

(1998ன் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற நாவல்) பார்வை தொலைத்தவர்கள் யோசே சரமாகோ தமிழில் எஸ். சங்கரநாராயணன் ••• நாவலின் பகுதி ••• அதிகாலை மணி மூணுக்கு மேல் இருக்கும். முட்டியால் தாங்கி சிரமப்பட்டு திருடன் எழுந்து உட்கார்ந்தான். அவன் காலில் உணர்ச்சியே இல்லை. ஆனால் அந்த வலி மாத்திரம் இருந்தது. மற்றபடி அந்தக் கால், அது அவனுடையதே அல்ல. கால் முட்டி விரைத்திருந்தது. தனது நல்லநிலையில் இருக்கிற மற்ற கால் பக்கமாக உடம்பைத் திருப்பிக்கொண்டான். அதைக் கட்டிலில் இருந்து தொங்கப் போட்டிருந்தான். இப்போது தன் ரெண்டு கையாலும் காயம் பட்ட காலைப் பற்றி அதை முன் கால் வாட்டத்துக்கு நகர்த்த முற்பட்டான். சுரீர் என்று ஓநாய்கள் ஒன்றாய்ப் பாய்ந்தாப் போல அவனுள் வலி ஆளையே புரட்டியெடுத்து விட்டது. காயத்தின் கிண்ணத்தில் இருந்து பொங்கி எழுந்துவந்த அலையாய் வலி. கைகளை ஊன்றியபடி உடம்பை மெல்ல படுக்கையில் நகர்த்தி வார்டின் நடு நடைபாதைப் பக்கமாய் நகர முயன்றான். கட்டிலின் கால்பக்க இரும்பு...