உலக இலக்கியம் - நட் ஹாம்சன் (நோர்வே)
நடையழகினாலும், புதிய தளங்களைப் கையாண்டதாலும் பரவலாகப் புகழ்பெற்றார் நட் ஹாம்சன். 1920ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது. சாதாரண ஒரு சராசரி ஈயின் கதை • • • நட் ஹாம்சன் (நோர்வே) நா ன் எழுதிக்கொண்டிருந்தேன். திறந்திருந்தது ஜன்னல். ஜன்னல்வழியே அந்த ஈ உள்ளே வந்தது. ஆக எங்கள் சிநேகம் ஆரம்பமானது. ஈ என் தலையைச்சுற்றி ஒரு ஆட்டம் போட்டது. தலையில் அல்கஹால் பூசியிருந்தேன். அந்த வாசனைக்குதான் அதற்கு அப்படியொரு கிறுகிறுப்பு. கையைவீசி, போ அந்தாண்ட,,, என அதை விரட்டி... எதையும் அது சட்டை பண்ணவில்லை. அப்புறம்தான் காகிதம் வெட்டும் கத்திரிக்கோலைக் கையில் எடுக்க முடிவுசெய்தேன் நான். நல்ல பெரிய, அருமையான கத்திரிக்கோல். இன்ன உபயோகம்னில்லை, எனது புகைக்குழாயைக் குடைந்து சுத்தம்செய்ய, நெருப்பைச் சீண்டிவிட என்று கண்டபடி அதை நான் பயன்படுத்துகிறேன். சுவரில் ஆணியடிக்கக்கூட அதால் மண்டையில் நச்சென்று போடுகிறேன். பேணிப் புழங்கிய என் கைலாவகத்தில் பயங்கரமான ஆயுதம் அது. அதைக் காற்றில் விஷ் விஷ் என வீசினேன். ஈ பறந்து வெளியே போய்விட்டது. ஆனால் கொஞ்சநேரத்திலேயே