இளமைக் கதை - உலருமுன் பனித்துளி

உ ல ரு மு ன் ப னி த் து ளி எஸ். சங்கரநாராயணன் சு தாகர் நைன்த் பி. கடையில் மேப் வாங்கப் போனால் தோழியுடன் அவள். லதா. நைன்த் சி. அவள் கையில் தகதக பொலிவுடன் தங்கப் பேனா. “இந்தப் பேனா எவ்ளோ?“ “நூத்தியம்பது ரூவா…“ “அவ்ளவா?“ என்று அழகாய் வெட்கப்பட்டாள். திரும்ப வைத்தாள். திரும்பி தன் தோழியிடம் “ரொம்ப அழகா இருக்கில்லே?“ என்றாள். உன்னை விடவா, என நினைத்தான் சுதாகர். தலையில் ரோசாப்பூ செருகியிருந்தாள். அது பின்பக்கம் என்றால், முன்பக்க ரோசாப்பூ… உன் உதடுகள்… என ஒரு திகட்டலுடன் நினைத்தான். என்ன வாங்க வந்தோம் என்றே அவனுக்கு மறந்திருந்தது. அது நேற்று. இன்று இது. பள்ளிக்கூடம் விட்டு அவனும் சிவகுமாரும் சைக்கிளை எடுக்கிறார்கள். அவன் பக்கமாக சைக்கிளை உருட்டி அவள். சட்டென அவனை நிமிர்ந்து ஒற்றைப் பார்வை. திரும்பிக் கொண்டாள். உன்னை எனக்கு, ஓ தெரியுமே, என்கிற பார்வை. அவன் எதுவும் பேசியிருக்கலாம். அவன் பேச அவள் எதிர்பார்த்...