
நோபல் பரிசு பெற்ற போலந்து எழுத்தாளர் இந்துமதம் பத்தி யோசித்து ஒரு கதை வடித்திருக்கிறா ர் என்பதே இதில் என் முதல் ஆச்சர்யம். வாழ்வும் சாவும் ஹென்ரிக் சியென்கிவிச் (போலந்து) தமிழில் எஸ். சங்கரநாராயணன் ப ரந்த இரு பெருவெளிகளின் நடுவே துல்லியமாக ஓடும் நதி ஒன்று. நதியின் கரைகள் ஓரிடத்தில் சரிந்திறங்கி குளம்போலும் அடங்கியது. உள்ளே உள்ளது உள்ளபடி தெரியும் அமைதியான நீரோட்டம். இந்தச் சிற்றாழப் பகுதியில் தண்ணீர் சற்று இருள் பழுப்பு கண்டிருந்தது. அதன் அடியில் பொன்னிற மணல்படுகை. தாமரைத் தண்டுகள் அதில் இருந்து முளைத்தெழுந்திருந்தன. அந்தத் தண்டுகளில் வெண்மையும் சிவப்புமான மலர்கள், மினுமினுக்கும் நீர்ப் பரப்புக்கு மேல் மலர்ந்திருந்தன. பலவண்ணச் சிறு வண்டுகள் பட்டாம்பூச்சிகள் என அந்தப் பூக்களைச் சுற்றின. கரைபக்கம் பனை மரங்கள். உயர உயரங்களில் புள்ளினங்களின் வெள்ளிமணி யோசை போன்ற சப்தயெடுப்புகள். அந்த இரு பிரதேசங்களுக்கும் ஒன்றிலிருந்து இன்னொன்றுக்குக் கடந்து போய்வரும் வழியாக இந்தக் குளம் இருந்தது. முதல் பிரதேசம் வாழ்க்கை வெளி என்று அழைக்கப்பட்டது. மற்றது மரண வெளி. மகா புருஷனும் சர...