short story மெ ழு கு வ ர் த் தி * எஸ். சங்கரநாராயணன் ஏ ப்ளஸ் பி - என்று அண்ணன் படிப்பான். குடுவையில் ஏதாவது வாயு சேகரிக்கும் முறை பற்றிப் படிப்பான். அக்பரின் சாதனைகள் படிப்பான். சர்க்கரை அதிகம் கிடைக்கும் ஏதோ நாடு, பற்றிப் படிப்பான்... அடுத்த வீட்டுக்காரன் பற்றித் தெரியாது. அட்டையே பார்த்திராத புத்தகமும் அதன் ஆசிரியரும் பற்றித் தெரிந்து கொள்வான். அறிவை விருத்தி செய்கிறான். வகுப்பில் முதல் ஐந்துக்குள் இடம். அண்ணன் பற்றி ஐயாவுக்குப் பெருமை உண்டு. இவன் கிரிக்கெட்டில் டென்டுல்கர் எத்தனை ரன் எடுத்தான் என்பதில் கவலை காட்டுவான். ‘அதெல்லாம் பரிச்சைல கேக்க மாட்டங்கடா’ என்பான் அண்ணா. கேட்கத்தான் இல்லை. பரிட்சை முடிவு செய்தித்தாளில் வந்தபோது இவன் எண் இல்லை. ‘என்னா சிவநேசா, முன் நம்பர் இருக்கு. அடுத்த நம்பர் இருக்கு. உன் நம்பரை அச்சுப்போட மறந்துட்டானா?’ என்கிறார் அப்பா. சிரிக்கிறாப்போலப் பேசினாலும் முகம் சிவந்து கிடந்தது. சர்வீஸ் கமிஷனோ எதோ எழுதி அண்ணனுக்கு தமிழ்நாடு அரசு வேலை. மின்சார வாரியத்தில். வீட்டில் எல்லாரும் சந்தோஷமாய் இருந்தார்கள். இவனுக்கும் சந்தோஷம...
Popular posts from this blog
ஆயுதம் எ ஸ்.சங்கரநாராயணன் “ரா த்திரி தனியா இருந்துக்குவியா இவளே?” என்று அவன் சாதாரணமாய்க் கேட்டான். சாதாரணமாய்த் தான் கேட்டானா, என்பதில் ஒரு யோசனை. ஏனென்றால் அவன் விருச்சிக ராசி. ரெண்டில் செவ்வாய். சட்டென அவன் பேச்சு ஆளைத் தூக்கி வீசிவிடும். “அட நான் சும்மா ஜாலியாச் சொன்னேன். என்ன இவ்ள சீரியசாயிட்டே?” என்று நம்மை சீரியசாக்கிவிட்டு அவன் சாதாரணமாகப் பேசுவான். அவனிடம் அஜாக்கிரதையாக இருக்க முடியாது. சட்டென முள் உரசி கீய்த்தாற் போல ஆகிவிடும். அவசர வேலை என்று அவன் அலுவலக விஷயமாகக் கிளம்ப வேண்டி யிருந்தது. மதுரை. அவன் கல்லூரி படித்த ஊர். மதுரை என்னும்போதே அவன் முகத்தில் புன்னகை மலர்வதை அவள் கண்டிருக்கிறாள். “உங்கவூருக்குக் கிளம்பியாச்சா?” என்றபடியே சித்ரா அவனுக்கு ஒரு துண்டை எடுத்துப் பெட்டியில் வைத்தாள். எதையும் கச்சிதமாக அடுக்கி எடுத்துப்போக அவனுக்குத் தெரியாது. தெரியாது என்று சொல்லமாட்டான். “நீ எவ்ள அழகா இதெல்லாம் பண்றே?” என்பான். நாம் துணிமணி எடுத்துவைக்க வேண்டும் என்று பொருள். பொதுவாக அவன் ஊருக்குக் கிளம்பிப் போக நேர்ந்தால் சித்ரா அம்மாவீட்டில் போய்ப் படுத்துக் கொள்வ...
ஓம் சக்தி தீபாவளி மலர் 2023ல் வெளிவந்த கதை. எமர்ஜென்சி கோட்டாவும் வெயிட்டிங் லிஸ்டும் எஸ்.சங்கரநாராயணன் சி ல பெயர்களை வைத்து அந்த நபர் ஆணா பெண்ணா என்று யூகிக்க முடிவது இல்லை. எங்கள் அலுவலகத்தில் கஸ்தூரி என்று ஒருத்தர் வேலை செய்தார், அவரது முழுப்பெயர், கஸ்தூரிராஜன்… என்று நினைக்கிறேன். அதுவே ஞாபகத்தில் இல்லை. எல்லாரும் அவரை கஸ்தூரி சார் என்றே அழைத்துப் பழக்கம். கஸ்தூரி தினசரி அலுவலகத்துக்குக் குடை எடுத்து வருவார். சிறு வெயிலும் அவரை ஆயாசப் படுத்தியது. தளர்ந்த நடை. “இன்னும் ஒரு வருடம். நான் ரிடையர் ஆயிருவேன். அதுவரைக்கும் தாக்கு பிடிக்கணுமே” என்று பேரலுப்புடன் பேசுவார். பார்க்கப் பாவமாய் இருக்கும். சில பேர் துன்பப்பட என்றே பிறக்கிறார்கள் என்று அவரைப் பார்த்தால் தோன்றும் . நிறைய ஆசையும் எதிர்பார்ப்புமாய் அவர் தன் மனைவியைக் கல்யாணம் செய்து கொண்டார். அவர் மனைவி அத்தனை அழகு என்று சொல்ல முடியாது… என்றாலும் அவர் அவளை அத்தனை நேசித்தார். கல்யாணத்துக்குப் பிறகு தன் வாழ்க்கை அபாரமாய் இருக்கும் என அவருக்கு அத்தனை நம்பிக்கை இருந்தது. கனவு இருந்தது. கஸ்தூரியின் மனைவிக்கு கணவன்மேல் ...
தங்களின் காணொளி கண்டேன், கேட்டேன். மிகவும் யதார்த்தமான பேச்சு. நம்முடைய நூலை நாமே சிபாரிசு செய்துகொள்வதில் வெட்கம் வருகிறது என்னும்போது இன்றைய குழு-எழுத்தாளர்களைப் பற்றி உண்மையிலேயே வெட்கப்படவேண்டி இருக்கிறது என்பேன். பதிப்பாளர்கள் விளம்பரம் செய்வதை நிறுத்திவிட்ட நிலையில், எழுத்தாளன் தன்னைத் தானே சுய விளம்பரம் செய்துகொள்ளவேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறான். உங்களுடைய புத்தகங்கள் நன்கு விற்பனையாவது மகிழ்ச்சியளிக்கிறது. 'இருவாட்சி' யை இன்னும் பார்க்கவில்லை. சென்னை வந்ததும் பார்க்கிறேன். நன்றி. - இராய செல்லப்பா நியூஜெர்சி.
ReplyDelete