
'விறகு' – வெட்டி அன்டன் செகாவ் தமிழில் எஸ். சங்கரநாராயணன் ''த ர்மப்பிரபு, உங்கள் பரிவுப் பார்வையை என்மீது செலுத்துங்கள். நான் மூணு நாளா எதுவுமே சாப்பிடவில்லை. கடவுளாணை. குளிருக்கு ஒதுங்க விடுதிச் செலவுக்கான அஞ்சு கோபெக், அதுவே என்னிடம் கிடையாது. ஒரு கிராமத்தில் அஞ்சு வருஷம் நான் பள்ளிக்கூட வாத்தியாரா வேலை பார்த்தவன். ழெம்ஸ்ட்வோ விவகாரத்தில், அதில் சம்பந்தப்படவே இல்லாத போது, எவனோ என்னையும் மாட்டிவிட்டுட்டான். இப்ப வேலை யிழந்து நிற்கிறேன். ஒரு வருஷமாய் இப்படி போக்கத்துப் போயி அல்லாடித் தவிக்கிறேன்...'' இவர் ஸ்கோர்த்சவ். பீட்டர்ஸ்பர்க் நகரத்தின் வழக்கறிஞர் அவனைப் பார்த்தார். கந்தையான அவனது கருநீல மேல்கோட்டு. இரத்த சோகையான குடிபோதைக் கண்கள். செம்மைப்பட்ட கன்னங்கள்... அவனை எங்கேயோ பார்த்தாப் போல் இருந்தது. ''... இப்ப எனக்கு காலுகா மாநிலத்தில் ஒரு வேலை கிடைச்சிருக்கு...'' அவன் தொடர்ந்தான். ''என்கிட்ட தம்பிடி கிடையாது. எப்படி அங்க நான் போக முடியும்? கருணை காட்டுங்க புண்ணியவான். கேட்க அவமானமாகத்தான்...