
நன்றி வடக்குவாசல் மாத இதழ் நிர்த்தாட்சாயணி எஸ். சங்கரநாராயணன் ஐ யா கதை எனக்குத் தெரிஞ்ச அளவில் சொல்கிறேன். இது நான் எழுதும் முதல் கதை ஆகும். மேலும் கதைகள் எழுதுவேனா தெரியாது. அதற்கான நம்பிக்கையும் அவநம்பிக்கையும் இந்தக் கதை முடியும்போதுதானே எனக்கே புலப்படும்? இப்போதே இதன் கட்டுரை நடை என்னை ஆயாசப் படுத்துவதை உணர்கிறேன். சகித்துக் கொள்ளுங்கள். இத்தனை சீக்கிரம் நான் அலுப்படைந்துவிட முடியாது. கதை என்றால் நீதி தேவையா தெரியவில்லை. எதற்கும் நீதி ஒன்று வைத்துக் கொள்வது நல்லது. மழை வராங்காட்டியும் சும்மா குடை எடுத்துக் கொண்டு வெளியில் கிளம்புவது இல்லையா... சரி - இந்தக் கதைக்கு நீதி என்ன? பழைய ஈசாப் ரகமான நீதிதான். அதான் சொன்னேனே நான் பெரிய எழுத்தாளன் ஒன்றும் அல்லன். தவிரவும் இது என் முதல் முயற்சியும் ஆகும்... ஒவ்வோர் ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள். ஆட ஆச்சரி...