
சிறுகதை - இந்தியா டுடே • பெயரே இல்லாத மனிதன் எஸ்.சங்கரநாராயணன் • எ ப்பேர்ப்பட்ட வித்வான் அவர்... ரவிப்பிரகாஷ். என்ன குரல். என்ன குழைவு. என்ன ஜாலம்... இசைக்கருவிகளின் சாகசங்களையும் அநாயாசமாய் எட்டமுடிந்த குரல் அல்லவா அது? குரல் அல்ல, குரல் அலை. குரல் அருவி. குற்றாலக் குளிர் சாரல். பெயர் சொல்லவே வாய் மணக்கும். இசை மணக்கும். அவனுக்குக் குரலே இல்லை. பெயரே இல்லை. பெயர் எதற்கு? யார் அவனைக் கூப்பிடப் போகிறார்கள்? கூப்பிட்டாலும் எப்படி அவனால் அதைப் புரிந்துகொள்ள முடியும்? அவன் ஒரு செவிட்டு ஊமை. தொட்டே அவனைக் கூப்பிட வேண்டி யிருந்தது. மொழி அவனிடம் எடுபடவில்லை. கைகளாலும் சமிக்ஞைகளாலும் அவனோடு பேச வேண்டும். லேசாய் மழை தூறிக் கொண்டிருந்த வேளையில் அவன் அவரிடம் வந்து சேர்ந்தான். ஏனோ அவர்வீட்டு வாசலில் வந்து நின்றான் அவன். காத்து நின்றான். அருமையான பொழுது அது. காலையின் சிறு வெளிச்சம். சோம்பல் முறித்து எழுந்துகொள்ளும் குதிரை. ஒலிகள் இன்னும் திரள ஆரம்பிக்கவில்லை. சிறு மழைக்கு உலகம் இன்னும் சோம்பி ஒடுங்கிக் கிடந்தது. தாவரத்துப் பசுமையில் அடர்வண்ணம் தீற்றும் மழை. காட்சி த...