Posts

Showing posts from June, 2020
Image
உலகச் சிறுகதை நன்றி - சங்கு சிற்றிதழ் ஓர் இரவுநேர வருகை * ஷெய்கா ஹுசைன் ஹெலவி (அரபி) தமிழில் எஸ்.சங்கரநாராயணன் க ல்லறையிலிருந்து எங்கள் வீட்டுக்கு வரும் பாதை ஒன்று. ஒவ்வொர் இரவிலும் அப்பா அந்தப் பாதையில் கல்லறையில் இருந்து வீட்டுக்கு வருவார். அவர் தோட்டத்தில் வரும்போதே எனக்கு அவர் வரும் காலடிச் சத்தம் கேட்கும். நான் தூங்குவது போல பாசாங்கு செய்தபடி இருப்பேன். அப்பா உள்ளே வந்து அவரது கழியைத் தேடுவார். எனது அலமாரியில் தான் அதை அவர் பொதுவாக மறைத்து வைத்திருப்பார். அவர் வருவார் என்றுதான் நான் அறைக்கதவைத் திறந்து போட்டிருந்தேன். அவர் வரும்போதான இப்படியான விளையாட்டு எனக்கு வேடிக்கை. அவர் தன் கண்களைக் கல்லறையிலேயே விட்டுவிட்டு வந்தார். ஒவ்வொரு முறை அவர் வருகிறபோதும் நான் அவரது கழியை வேறு வேறு இடங்களில் ஒளித்து வைத்தேன். அரைக்கண்ணால் அவரை வேடிக்கை பார்த்தேன் நான். கழியைத் தேடித் தேடி அவர் சோர்வடைந்தார். அப்படியே தரையில் பரிதாபமாக, அலுத்துச் சுருண்டு படுத்துவிட்டார். படுக்கையில் இருந்து எழுந்துகொண்டு அவர் கைகளை நான் பற்றிக் கொண்டேன். வீட்டில் மற்றவர்கள் விழித்துக் கொள்ளு...