Posts

Showing posts from January, 2022
Image
  நன்றி பேசும் புதிய சக்தி மாத இதழ் • கட்டுரைத் தொடர் நிசப்த தீங்காரம் / பகுதி 3   அசலைவிட மேலானது நகல்   க தைகள் எழுதப் படுகிற போது அந்தப் புனைவில் ஒரு வாழ்க்கை, நகலெடுக்கப் படுகிறது. ஆனால் நகல்கள் என்பன அத்தனை குறைத்து மதிப்பிடத் தக்கவை அல்ல. அது அசல் அல்லதான். நகல்தான். ஆயினும் நகல்கள் ஒரு நெருக்க பாவனையை வாழ்க்கையை நோக்கிக் குவிக்கின்றன. நகல் எவ்வளவிலும் அசலின் முழுமையான தன்மையைப் பிரதிபலிக்காது. அது முழுமையின் ஒரு பகுதியே. முழுமை முப்பரிமாணமானது. நகலோ இரு பரிமாணமானது தான், என்பது உண்மையே. ஆனால்… அச் சிறு அளவில், எழுத்தாளனின் பார்வைத் தேர்வு அடிப்படையில் எழுத்தின் வீர்யம் அல்லது சுய கவனக் குவிப்பு அங்கே அதிகரிக்கிறது தன்னைப் போல, என்பது ஆச்சர்யமானது. நகல்களில் எழுத்தாளனின் இதயமும் ஓர் ஈடுபாட்டுடன் இயங்குகிற போது அந்த நகல் கலை வடிவம் என அமைதல் காண்க. கலையின் சிறப்பு அது. அந்த நகலை நீங்கள் ஒரு கலைஞனின் கண்வழி பார்க்கிறீர்கள் இப்போது. அவனது கண்களின் உக்கிர தரிசனத்தை அவ்வளவில் ஒரு கலைஞன் உங்களுக்கு மடை மாற்றுகிறான். அசலின் சிறு பகுதியை வட்டமிட்டு எழுத்தாளன் அடையாளம் காட்ட