
சிறுகதை நன்றி / சொல்வனம் 10 04 2022 இதழ் • செகண்ட் இன்னிங்ஸ் எஸ்.சங்கரநாராயணன் பெ யர் கோமதிசங்கர். என்றாலும் முழுப் பேரும் சொல்லி எவன் கூப்பிடறான். அவங்க ஐயாவே “கோமதி… ஏல இங்க வா” என்றுதான் அழைக்கிறார். தன் பெயர் பொம்பளைப் பெயர்போல அமைந்து விட்டதில் அவனுக்கு வருத்தம் உண்டு. ஊரில் எலலாப் பயல்வளுக்கும் ஆம்பளைப் பெயரா அமைஞ்சிருக்கு. இவனுக்கு வெறும் சங்கர்…னு வெச்சிருக்கப்டாதா? பையன்கள் எல்லாரும் பேசிச் சிரிச்சி ஓடியாடி விளையாடற மட்டுக்கு ஜாலியாத்தான் இருக்கும். ஆனா திடீர்னு கேலி கிண்டல்னு பண்ண ஆரம்பிச்சிட்டாங்கன்னா, “போடி பொட்டை!” ஒரே வார்த்தையில் கரண்ட் ஆஃப். ஆனாலும் தனியா இருக்கிற போது அவன் பேரை நினைக்க அவனுக்கே சிரிப்பு. என்ன பேரு இது. பசு மாட்டுக்கு வெச்சா மாதிரி… இதே பேரு வேற யாருக்காவது இருந்திருந்தா அவனும் கிண்டல் அடிச்சிருப்பான். தெருவில் பாதிப் பிள்ளைங்களுக்குப் பட்டப் பெயர் வைப்பது அவன்தான். அவனது இந்தத் திறமைக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உண்டு. ரெட்டை மண்டை சுப்ரமணி. அவன் மண்டை கீறல் விட்ட தேங்கா கணக்கா டபுள் சைசா இருக்கும். மயில் ராமசாமி. அவன் கழுத்து ச...