
SHORT STORY ஆயிரம் தலைபார்த்த அபூர்வ சிகாமணி எஸ். சங்கரநாராயணன் அ வனது தொழில் பூர்விகம் ஆலமரத்தடி. நாற்காலி போட்டு துண்டு போர்த்தி பூபாலன் முடிவெட்ட இவன் கண்ணாடி பிடிக்க வேண்டியிருக்கும். டவுசர் அவிழும். இடக்கையால் டவுசரைப் பிடித்துக்கொண்டு வலக்கையால் கண்ணாடியைத் தூக்கி முகத்துக்குக் காட்டுவான். பராக்கு பார்த்தபடி ஒருமுறை டவுசர் நழுவுகிற பதட்டத்தில் வலக்கையால் பிடிக்கப்போக கண்ணாடி கீழே விழுந்த சிலுங்... அத்தோடு அந்த வேலையும் போயிற்று. பிறகு சலூன் சலூனாக மாறி, நரை மண்டை, புல்லு மண்டை, ரெட்டை மண்டை, கோண மண்டை என்று விதவிதமான மண்டைகளைப் பார்த்துத் தொழிலில் தேறினான் சிகாமணி. அவன் பட்டணம் கிளம்பி வந்தது இப்படி சலூன் வைக்க அல்ல. கலைத்தாய்க்கு சேவை செய்ய. சினிமாவில் சேர எல்லா இளைஞர்களையும் போலவே அவனுக்கும் அபிலாஷைகள் இருந்தன. இராத்திரியில் முன்னணிக் கதாநாயகிகள் அவனை எழுப்பி ‘வா, என்னோடு டூயட் பாடு. சேவை செய்ய வேண்டிய இளம் வயதில் தூங்கினா என்ன அர்த்தம்?’ என அவன் கையைப் பிடித்து இழுத்தார்கள். குறைந்தபட்சம் ஒரு ரஜினி ஆகிவிட அவனுக்கு அபிப்ராயம் இருந்தது. பஜார்ப்பக்கம் சலூன் ...