29 01 2017 காலை 11 30 மணி கவி வளநாடனின் ‘அய்யனார் கோயிலும் அபுபக்கர் வகையறாவும்’ நூல் அறிமுக விழா உரை புலம் பெயரும் சொற்கள் எஸ்.சங்கரநாராயணன் க வி வளநாடனின் இந்தச் சிறு நூல் இதயத்தோடு உறவாடும் விதத்தில் அவர் இதயத்தில் இருந்து இடம்பெயர்ந்து வந்திருக்கிறது. வட்டார வழக்குகள் இலக்கியம் ஆகுமா, என்ற வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ள நிலையில், இந்தப் பத்திகளை இலக்கியம் என்று உரசிப் பார்த்து உண்மை உரைப்பதில் எனக்கு எவ்விதத் தயக்கமும் இல்லை. வட்டார வழக்குகள், சொற்களில் ஏற்றிய வட்டாரப் புழுதி. அந்த மண்ணின் நிறமும் மணமும் நமது உயிரோடு பின்னிப் பிணைந்தவை அல்லவா? ஒரு வட்டார வழக்கு உரையாடலில் அந்த வார்த்தைகளைப் பேசும் மனிதரின் ரசனை, ருசி மற்றும் வாழ்க்கை சார்ந்த அவனது கவனங்கள், அவனது வயது, ஊர்மண் சார்ந்த அவனது பிடிப்பு, என எத்தனையோ விஷயங்களை நாம் அவதானிக்க முடிகிறது. எல்லாருக்கும் பொத்தம் பொதுவான ஒரு மொழிஉரைநடையில் இது சாத்தியமே இல்லை. மொழி, அதைவிட வாழ்க்கை முக்கியம் நமக்கு. ஆகவே வாழ்க்கையை அதிகமாய் நமக்கு அதன் கதகதப்புடன் கைமாற்றி விடுகிறது வட்டார அடையாளங்களுடனான புழங்கு மொழி. ...
Posts
Showing posts from January, 2017
- Get link
- X
- Other Apps

art jeeva தேநீர் எஸ். சங்கரநாராயணன் அ திகாலை நாலரை. அதுதான் அவர் விழித்துக் கொள்ளும் நேரம். சிவகுருவுக்கு அலாரமே தேவை இல்லை. விளக்கைப் போடாமல் போய்ப் பல் விளக்கினார். கோபால் பல்பொடி. உள்ளறையில் மகனோ மருமகளோ புரண்டு படுப்பதைக் கேட்டார். அதிகச் சத்தமாய்க் கொப்பளிக்கிறேனோ, என நினைத்தார். சட்டையை மாட்டிக் கொண்டார். இப்பவெல்லாம் காலையில் குளிர்கிறது. கைத்தடி கிடையாது. கண்ணாடியும் இல்லை. இருட்டில் காலால் துழாவி செருப்பை மாட்டிக் கொண்டார். கதவை உள்பக்கமாகப் பூட்டி சாவியை உள்ளே சணல் மிதியடிக்கு எறிந்தார். அது சற்று குறி பிசகி டைல்ஸ் தரையில் விழுந்து டைல்ஸ் முனகியது. ச், என்றபடி தெருவில் இறங்கினார். வெளிச்சமே இல்லை. மகா அமைதி. லேசான குளிர். தெரு தாண்ட வழியில் சாமி, கூடச் சேர்ந்து கொண்டார். சாமி மேலத் தெரு. வத்தக் காய்ச்சிய ஒல்லி உடல். கடந்த நாலைந்து வருடங்களாக அவர்கள் இப்படி அதிகாலையில் சேர்ந்து கொள்கிறார்கள். துரை இப்போது வருவது இல்லை. அவர்கள் எல்லாரையும் விட மூத்தவர் துரை. மாடியில் இருந்து இறங்கும்போது லாத்தி அவர் அடிபட்டுக் கொண்டார். காலில் கட்டு. அவர் அறைக்குள்ளேயே ந...
- Get link
- X
- Other Apps

நன்றி நவின விருட்சம் இதழ் 101 Art madhiyazhagan subbiah maddy மகிழ்ச்சியின் தூதுவன் எஸ். சங்கரநாராயணன் ஞா யிற்றுக்கிழமையின் அடையாளமாக அவன் மாறிப் போயிருந்தான். காலையில் லேசாய் வெயில் மேலெழும் நேரம் வருவான். அவன் வருமுன்னே அவனது புல்லாங்குழல்ச் சத்தம் வரும். சாத்திய கதவுகளுக்கு உள்ளேயும் பாயும் வல்லமை பெற்றிருந்தது அது. எல்லாருக்குமே அந்தச் சத்தம் பிடித்திருந்தது. சாத்திய கதவுகள் அந்தச் சத்தத்தில் திறந்தன. அது ஞாயிறு காலையின் சத்தங்களில் ஒன்றாக ஊரில் எல்லாரிடமும் பதிவும் ஆகியிருந்தது ஆச்சர்யம். எதோ மூங்கிலை வெட்டி துளைகள் இட்டு, கிடைத்த சாயம் ஏற்றிய குச்சி அது. அதில் காற்று மாட்டிக்கொண்டாப் போல ஒரு சத்தம் வந்தது. அவனே அதை, அந்தக் குழலைச் செய்திருக்கவும் கூடும். அதை வைத்துக்கொண்டு அவன் கன ஜோராய் சில பாடல்கள் வாசித்தான். சிரமமான மெட்டுக்கள் அல்ல அவை. என்றாலும் அந்த மெட்டுக்களை அந்தக் குழலுக்குள் மடக்கி நீட்டி அவன் உற்சாகமாய் சாமர்த்தியமாய் வாசித்தாப் போலத்தான் இருந்தது. துணியை மடித்து அயர்ன் பண்ணி அணிந்து கொண்டாப் போல! எனக்கு அவனைப் பிடித்திருந்தது. அவனிடம் ஒரு த...
- Get link
- X
- Other Apps

சிறுகதை – நன்றி பரணி காலாண்டிதழ் Art Jeeva மொழிசாராத் திரைப்படங்கள் எஸ். சங்கரநாராயணன் கு ளிக்கப் போகிறோம், என்றுதான் நினைத்தாள், என்றாலும் முகத்துக்கு ரோஸ் பவுடர் போட்டுவிட்டான் சிங்காரம். லிப்ஸ்டிக் வேறு. கருப்பு முகத்துக்கு அது பாந்தமாகவும் இல்லை. காட்சிக்கான உடை... உள்ளாடையின் எலாஸ்டிக் நாடாக்கள் அதிக நீளமாய் வைத்திருந்தார்கள். ஆம்பிளை உடைக்கு இந்த மெனக்கெடல் கூடக் கிடையாது. வெறும் இடுப்புத் துண்டு. அதுவே போதும். லைட். கேமெரா. ரோலிங். ஸ்டார்ட் ஆக்ஷன்... “நல்லா ஈடுபாடா முகத்தில் பாவனை பண்ணும்மா.” அந்த வெளிச்சத்தில், அத்தனை சூட்டில் பாவனையாவது... கண்ணே கூசும். இப்போது பரவாயில்லை. பழக்கம் வந்துவிட்டது. இது எத்தனாவது படம் என்பதே நினைவில் இல்லை. என்றாலும் இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்பது வேடிக்கை! அல்லது அது வருத்தமாகவும் இருக்கலாம். ஆனால் அவள் வருத்தப்படுவது இல்லை. வருத்தப்பட்டு ஆவது என்ன? அவள் வருத்தப்பட்டால் அதைக் கரிசனமாய் விசாரிக்க யார் இருக்கிறார்கள்? கரிசனப்பட ஆள் இல்லாமல் போனால் அழுகை, சிரிப்பு ரெண்டுக்குமே அர்த்தங் கிடையாது. ஆனால் ஒண்ணு. அவளைப் பற்றிய அநேக ...