
சுருக்குவலை (The Purse Seine, 1937) ராபின்சன் ஜெஃபர்ஸ் • கடற்கரை வளைவில் ஒரு குன்று அங்கிருந்து பார்வைக்கு எட்டிய வரை மேலைக்கடலின் கரிய நீர்ப்பரப்பு நிலவின் மங்கிய வெளிச்சத்தில் கடல்மீன்களின் மின்வெட்டும் பளபளப்பு பால் சிந்திச்சிதறியது போல் ஒரு மீன்கும்பல் வட்டமிடும் இயந்திரப்படகில் இருந்து அதைநோக்கி வீசப்பட்ட சுருக்குவலை அது பரந்து மெல்லத் தாழ்ந்து வெண்ணிறத் திட்டின்மேல் விழுந்து அதன் திறந்த அடிப்பகுதியின் வட்டம் மீன்களை வளைத்து நீருக்குள் இறங்கி வேகமாகச் சுருங்கி இறுக்கிக்கொள்ள, சரக்கை படகுக்கு இழுத்த வலிய கரங்கள். எப்படிச் சொல்வதெனத் தெரியவில்லை அழகான ஆனால் அச்சுறுத்தும் காட்சி சிக்கிக்கொண்ட கடல்மீன்களின் கூட்டம் நீரில் இருந்து நெருப்புக்குள் பாய்ந்த அழகிய வடிவான வெள்ளிக்கத்திகள் வலையின் ஒரு புறத்தில் இருந்து எதிர்ப்புறத்துக்கு வாலை வேகமாகத் துடித்து நீந்தினாலும் வலையின் கயிறுகள் தான் எல்லை வேடிக்கை பார;த்த கடல் சிங்கங்கள் வானம்வரை இரவு விரித்த கறுப்புத்திரை அம்மீன்களுக்கு...