Posts

Showing posts from December, 2019
Image
நன்றி காணிநிலம் சிற்றிதழ் இலக்கியத்திற்கான நோபல் பரிசு 2018 பெற்ற எழுத்தாளரின் சிறுகதை எழுத்தாளருடன் ஒரு மாலை ஓல்கா தோகர்சுக் (போலந்து) ஆங்கிலத்தில் ஜெனிஃபர் குரோஃப்ட் ஆங்கிலம் வழி தமிழில் எஸ்.சங்கரநாராயணன் ----  அ வளது சிறந்த யோசனைகள் இராத்திரிகளில் அவளுக்கு வாய்த்தவையே. பகலைவிட இராத்திரியில் என்னவோ அவள் ஆளே வேறு ஆளாகிப் போனாப் போல. அதைச் சொன்னால், சும்மா அப்படியே சொல்லிட்டிருக்கே, என்றிருப்பான் அவன். நான் என்கிறாப் போல தன்னை முன்னிறுத்தி வேறெதாவது பேச ஆரம்பித்திருப்பான். நான்... பகலில் தான் தெளிவாக சிந்திக்கிறேன். அதுவும், காலைகளில்... எனது முதல் காபியை நான் அருந்திய பிறகு... நாளின் முதல் பாதியில்... தற்செயலாக, (ஓ கடவுளே, என்னவோர் சங்கடமான தற்செயல் அது) செய்தித்தாளில் அவள் வாசித்தாள். பெர்சியா, அலன்ஸ்டெயின்   என்று அவன் பயணம் மேற்கொள்ள விருக்கிறான். அவளுக்கு அத்தனை கிட்டத்தில் வருகிறான் என்பது அவளது தூக்கத்தைக் கெடுத்து விட்டது. எல்லாமே ஒட்டுமொத்தமாக அவளிடம் திரும்ப வந்து சேர்ந்தாற் போலிருந்தது. திரும்பி வந்தன என்றுகூட இல்லை. அவை அவளுடனேயே நினைவும...
Image
14 12 2019 ஜெயந்தி ஜெகதீஷின் ‘ரெஜிஸ்தர் ஆபிஸ் மசிகுண்டு’ சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டு விழாவில் வாசித்தளித்த உரை. * ஓடிக் கொண்டிருக்கும் நதி எஸ்.சங்கரநாராயணன் அ றிவிற் சிறந்த இந்த அவைக்குத் தலை வணங்குகிறேன். தோழி ஜெயந்தி ஜெகதீஷ் எனக்கு ‘வாசிப்போம்’ குழுவின் முதலாம் ஆண்டு நிறைவு விழாவில் உரையாளராக அறிமுகம் ஆனவர். ஓரளவு சுய சிந்தனையும், நோக்கும் போக்கும் கொண்டவராகவே தெரிந்தது. இந்த ஆண்டின் எங்கள் ‘இருவாட்சி இலக்கியத் துறைமுகம்’ பொங்கல் மலரில் அவர், அண்ணாச்சி கி.ரா.வின் பெண் பாத்திரங்கள் பற்றி ஒரு கட்டுரை எழுதி யிருக்கிறார், நான் கேட்டபடி. நல்ல கட்டுரை அது. பெண்கள் தங்களைப் பற்றிப் பேச வேண்டும். பேச முன்வர வேண்டும். அவர்கள் ஆண்கள்காட்டும் பெண்களைப் பற்றியும் பேச வேண்டும். ஆண்களின் கதைகளில் ஆண்கள் தங்களைவிட பெண்களையே அதிகம் பேசுகிறார்கள், உற்சாகமாக... என பல சமயம் நான் நினைப்பது உண்டு. அவை எல்லாமே ஓரளவு (வாய் பிளந்த) யூகங்கள் தான், என்றும் யோசிப்பது உண்டு. பெண்கள் தங்களைப் பற்றி எழுத முன்வர வேண்டும். எழுத்தில் பெண் எழுத்து ஆண் எழுத்து என்று உண்டா, என்றால் ஏன் இல்லாமல், ...