Posts

Showing posts from 2021
Image
  ஜன, - மார்ச் 2022 சங்கு இதழில் என் சிறுகதை டிங்கு எஸ்.சங்கரநாராயணன்   கு ழந்தையின் பெயர் சரவணமூர்த்தி. தாத்தாவின் பெயர் அது. பெயர்சூட்டும் வைபவத்தில் அதன் காதில் ஓதிய பெயர் அதுதான். என்றாலும் குழந்தைகளுக்குச் செல்ல அடிப்படையில் ஒரு பெயர் அமைந்துதான் விடுகிறது. குழந்தையின் பெயர் டிங்கு. எப்படி யார் வைத்தார்கள் அந்தப் பெயர் அதுவே யாருக்கும் நினைவில்லை. என்றாலும் அந்தப் பெயர் நிலைத்துவிட்டது. வயிற்றை எக்கி எக்கித் தவழ ஆரம்பித்ததில் இருந்தே அவனிடம் ஓர் அசாத்திய வேகம் இருந்தாற் போலிருந்தது. உலகைக் கட்டியாள்கிற வேகம். பெற்றவளுக்கு மூச்சு திணறியது அவனைச் சமாளிக்க. தவழ்ந்து போய்ச் சுவரைப் பிடித்துக்கொண்டு எழுந்து நின்ற குழந்தை தானே நடக்க முயன்று பொத்துப் பொத்தென்று விழுந்தது. என்றாலும் திரும்ப எழுந்துநின்று ஒரு குடிகாரத் தள்ளாட்டத்துடன் சிரித்தது அம்மாவைப் பார்த்து. ஒரு ராணுவ உடற்பயிற்சி பொல காலைத் தூக்கித் தூக்கி வைத்து சற்று தடுமாறி, ஆனால் அம்மாவை எட்டிவிட்டது குழந்தை. அதற்கு ஒரே சிரிப்பு. நடக்கத் தெரிந்தபின் அதை வீட்டில் கட்டுப்படுத்த முடியவில்லை. அதைக் கட்டிப்போட வேண்டி யிருந்தது
Image
  நிசப்த ரீங்காரம் • பகுதி 2 வருத்தப்பட்டு உயிர் சுமக்கிறவர்கள்   இ ளமை இருக்கும் வரை இருந்த இறுக்கமான கட்டுக்கள். பிடிமானங்கள் முதுமையில் சற்று தளர்ந்து தான் போகின்றன. உடல் தளர்வுக்கும் மனத் தளர்வுக்கும் தொடர்பு இல்லாமல் இல்லை, என்றுதான் தோன்றுகிறது. வாழ்க்கை அத்தனை உற்சாகமானது இல்லை போலத்தான் தெரிகிறது, இப்போது. இதை ஒரு காலத்தில் உற்சாகமாக நான் உணர்ந்து கடந்திருப்பதே இப்போது யோசிக்க வியப்பாக இருக்கிறது. அதிகம் வெற்றிகளைக் கணக்கில் எடுத்துக் கொண்ட மனது. எப்போது அது தோல்வி சார்ந்து கவனப்பட அல்லது கவலைப்பட ஆரம்பித்தது தெரியவில்லை. உடல் சுணக்கம் காட்டும்போது யோசனைகள் உட் சுருண்டு கொள்கிறது போலும். குளிர் தாளாமல் தன்னையே சுருட்டிக் கொண்டு ஒடுங்கிக் கொள்ளும் நாட்டு நாய் போல. இடுக்கண் வருங்கால் நகுக, என்கிறார் வள்ளுவர். அது வயசான காலத்தில் அவர் தனக்குத் தானே சொல்லிக் கொண்டதாய் இருக்கலாம். இடுக்கண் மாத்திரமே வந்தால் என்ன செய்வது? நான் மறு கன்னத்தைக் காட்டினேன். இரண்டிலும் அறை வாங்கியவன், இப்போது நான் என்ன செய்ய வேண்டும்? பஸ் நிறுத்தத்தை அடையுமுன் வந்து நின்ற பேருந்தை ஓடி எ
Image
  அமுதசுரபி தீபாவளி மலர் 2021 அலையுறக்கம் எஸ்.சங்கரநாராயணன்   அ வர் பெயர் ரத்தின சபாபதி. அவர் பெயர் அவருக்குத் தெரியாது. அதாவது தன் பெயரையே அவர் மறந்து போயிருந்தார். பெயர் என்று இல்லை. அவருக்கு என்னதான் நினைவில் இருந்தது? யாருக்குமே அதைக் கண்டுபிடிக்கத் தெரியவில்லை. மனைவி சாமுண்டீஸ்வரி. அவள் முகம் அவருக்குத் தெரிந்திருக்கலாம். பெரிதாய் அதைத் தாண்டி அவளுக்கு அவர் மனதில் அடையாளங்கள் இல்லை. அறிவு தாண்டி, பிடரிப் பக்கம் இருக்கும் சிறுமூளை, முகுளத்தின் இயக்கம் மாத்திரம் அவரிடம் செயல் பட்டதா ஒருவேளை? மனதையே தொலைத்து விட்டாரோ அவர்? பள்ளி வயதில் ஒரு சிறுகதை வாசித்திருக்கலாம். ஒரு ஈ, அதற்குத் தன் பெயரே மறந்து விடும். அது ஒரு கன்றுக் குட்டியிடம் போய், தன் பெயர் என்ன என்று கேட்கும்… கொழு கொழு கன்றே, கன்றின் தாயே, தாயை வளர்த்த ஆயா.. இப்படி ஒவ்வொருத்தரிடமாக அந்த ஈ, தன் பெயர் என்ன, என்று கேட்டுத் திரியும். கடைசியில் ஒரு கழுதைதான் அதைப் பார்த்து ஈஈஈ… என்று இளிக்கும். உடனே அதற்கு தன் பெயர் ஞாபகத்துக்கு வந்துவிடும், என்று கதை. அந்தக் கதையை ரத்தின சபாபதியும் பள்ளி வயதில் அறிந்திருப்பார். இப்போது
Image
  பொன்கூரை வேய்ந்த வானம் எஸ்.சங்கரநாராயணன் ***   அ ப்பா அலுவலகத்தில் இருந்து வந்து விட்டார். சந்திரசேகரன். மணி ஏழரை தாண்டி விட்டது. வெளியே போன பத்மராஜன் இன்னும் வீடு திரும்பவில்லை. அப்பா வந்தவுடன் அவனைத்தான் கேட்பார். பெற்றவளுக்குக் கவலையாய் இருந்தது. பிள்ளைக்கு ரெண்டுங் கெட்டான் வயது. பெற்றவர்கள் கொஞ்சம் விட்டுக் கொடுத்துதான் போக வேண்டும். காலம் அப்படி. அத்தோடு, இந்தக்காலப் பிள்ளைகளுக்கு நம்மைவிட வெளி உலகம் தெரிகிறது… என நினைத்தாள் அவள். மைதிலி. அம்மா. பையனைப் பற்றி அத்தனை கோபிக்கிறார் இவர். “எல்லாம் நீ கொடுக்கிற இடம்…” என்பதாகக் கத்துகிறார். இவருக்கு ஏன் இத்தனை கோபம் வருகிறது தெரியவில்லை. அது தன் வார்த்தை மதிக்கப் படவில்லை என்கிற ஆத்திரம். எங்கே போகிறான், என்று அவனும் சொல்லிவிட்டுப் போகலாம். என்றாலும் தோளுக்கு வளர்ந்த பிள்ளை வெளியே இறங்கும்போது விசாரணை தொனியில், எங்க போறே? எப்ப வருவே… என்றெல்லாம் கேட்பது பாந்தமாய் இல்லை. இவனும் சற்று அப்பாசொல் கேட்கலாம். அல்லது கேட்பதாக சிறிது பாசாங்காவது செய்யலாம். அவனும் கண் சிவக்க பதில் பேசுகிறவனாய் இருந்தான். அவளுக்கு அவனை ஆதரித்துப் பேசுவத