
கு று ந் தொ ட ர் பறவைப்பாதம் எஸ்.சங்கரநாராயணன் இறுதிப் பகுதி • சி ற்றமைதி நிலவும் மருத்துவ வளாகம். எல்லாரும் பைநிறைய சில்லறை போல கனமான சொற்களுடன் ஆனால் மௌனமாக நடமாடுகிறார்கள். ஐசியூ என வழி கேட்கவே மனம் படபடத்தது. வியர்வை முத்துக்கள் குளித்தன. ரத்தத்தில் குளிர். படபடப்பாய் உணர்ந்தார். அட ஆம்பளையே. நீ அவளுக்கு தைரியம் சொல்ல வேண்டாமா? முடியுமா? பெண்களை ஆண்கள் அடக்கி யாள்கிறதான பாவனை எல்லாம் சும்மா. துயர கணங்களில் பெண்களே ஆண்ளை வழி நடத்துகிறார்கள். அவர் பின்சீட்டில், வாகனத்தில் அமர்கிற மனைவி. ஆனால் அலுவலகத்து நெருக்கடி, அல்லது எதிர்பாராமல் திகைத்துப் போகிற தருணங்களில், அவர் அவள் மடிக்குழந்தை. துக்கம் பெண்களுக்குப் புதிது அல்ல என்பது போல, அக்கணங்ளில் அவர்கள் பலங்கொண்டு விஸ்வரூபம் எடுக்கிறார்கள். புடம் போட்டாற் போல பொலிகிறார்கள். கவனித்துப் பார்த்தால், கணவன் இல்லாமல் இவர்கள் சமாளித்துக் கொள்கிறதாகத் தான் தெரிகிறது. தங்களையும் கவனித்துக் கொண்டு பிள்ளைகளையும் வளர்த்து ஆளாக்கிக் காட்டுகிறார்கள் பெண்கள்... என ஆயிரம் பேரை உதாரணம் காட்ட முடிகிறது. ஆனால் மனைவியை நேசிக...